தயாரிப்பாளர் தக்காளி சீனிவாசன் காலமானார் | போர் சூழலுக்கு மத்தியில் சென்னை திரும்பினார் நடிகர் அஜித்குமார் | பிரியா பவானி சங்கரை தொடர்ந்து ரவிதேஜா படத்தில் இணைந்த தமன்னா! | இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படத்தில் நடிக்கும் குமரன் | சூப்பர் நேச்சுரல் கிரைம் திரில்லராக உருவாகும் 'மண்டவெட்டி' | தனுசுக்கு ஜோடியாகும் நடிக்கும் ருக்மணி வசந்த்! | 'ஆர்யா 40' படத்தில் இரு நாயகிகள் | 'டென்ஷன்' படத்தில் காமெடி கலந்த வில்லனாக ஆர்.கே.வரதராஜ் | 'ஜெயிலர் 2' படத்தில் ஷாருக்கான் கதாபாத்திரம் என்ன தெரியுமா? | அனிமேஷன் படத்தை இயக்குகிறாரா அனில் ரவிபுடி? |

வளர்ந்து வந்த இளம் கன்னட நடிகர் சம்பத் ஜெயராம். 'அக்னிசாக்ஷி' என்ற கன்னட தொடரின் மூலம் பிரபலமான இவர் திரைப்படங்களிலும் நடிக்க தொடங்கி இருந்தார். கடந்த ஆண்டுதான் திருமணம் செய்தார். ஜெயராம் நடித்த பல படங்கள் வெளிவராமல் தேங்கி கிடந்துள்ளது. சீரியல் வாய்ப்புகளும் பெரிதாக வரவில்லை. இதன் காரணமாக கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறும் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஜெயராம் பெங்களூர் நெலமங்கலம் பகுதியில் உள்ள தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 32 வயதான சம்பத் ஜெயராமின் மரணம் கன்னட சின்னத்திரை, பெரியதிரை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சம்பத் ஜெயராமின் மறைவு குறித்து நடிகர் ராஜேஷ் துருவா தனது டுவிட்டரில் “உனது பிரிவை தாங்கும் சக்தி இல்லை. நிறைய படங்கள் தயாராகி நிலுவையில் உள்ளன. உனது கனவை நிறைவேற்ற இன்னும் காலம் இருக்கிறது. திரும்பி வா'' என்று குறிப்பிட்டு உள்ளார்.