மிருணாள் தாக்கூர், ஜான்வி கபூர் தமிழில் நடிப்பார்களா? | ஏப்ரல் 17ல் திரைக்கு வருகிறது மிஸ்டர் எக்ஸ் | ரிலீஸை உறுதி செய்த இரண்டு வானம் | கர படத்தின் இரண்டாம் பாடல் நாளை (ஏப். 8) வெளியாகிறது | பைசன் படத்தை அடுத்து புதுமுக இயக்குனர் படத்தில் நடிக்கும் துருவ் விக்ரம் | ஜெயிலர் 2 படத்திற்கு 5 நாள் கால்சீட் தந்த ஷாருக்கான் | ஐஸ்வர்யா ராஜேஷை புறக்கணிக்கிறதா கோலிவுட் | இளையராஜா சரிவர பேசுவது இல்லை : தம்பி கங்கை அமரன் ஆதங்கம் | பத்திரிகையாளர், எடிட்டர், கமர்ஷியல் இயக்குனர் : இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் 91வது பிறந்தநாள் | சிம்புவின் ‛அரசன்' படப்பிடிப்பு நிறுத்தம் : நியாயம் கேட்கும் டி ராஜேந்தர் |

தெலுங்கு சின்னத்திரையுலகின் முன்னணி நடிகை கட்டா மைதிலி. இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தனது கணவர் கொடுமைப்படுத்துவதாக புகார் கூறியிருந்தார். இந்த நிலையில் அவர் தான் கொடுத்த புகாரின் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. அதை கண்டித்து நான் தற்கொலை செய்ய போகிறேன், என்று போலீசாருக்கே போன் செய்து கூறிவிட்டு அதிகமான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீஸார், போன் சிக்னலை வைத்து அவருடைய வீட்டைக் கண்டுபிடித்தனர். அங்கு சென்று பார்த்தபோது அவர் மயங்கிய நிலையில் இருந்தார். உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனையில் அவரைச் சேர்த்தனர். அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.