ஜான்வி கபூர் : கிளாமர் வாய்ப்புகளை மட்டுமே தரும் தெலுங்கு சினிமா | மக்கள் மேடை : தனி இயக்கம் துவக்கினார் ரஜினி மனைவி லதா | 60 வயதில் மூன்றாவது திருமணம் : அமீர்கானை விமர்சிக்கும் ரசிகர்கள் | காஜல் அகர்வால் நடிக்கும் 'தி இந்தியா ஸ்டோரி' ஜூலை 24ம் தேதி வெளியாகிறது! | மீண்டும் வெப் சீரிஸில் நடிக்கும் நாகசைதன்யா | ஜனநாயகன் : வினியோகஸ்தர்களுக்கு பணம் திருப்பித் தரப்படுகிறதா? | கருப்பு - தமிழக வசூல் 175 கோடி, அதிகாரப்பூர்வ அறிவிப்பு | பெத்தி : முதல் நாள் வசூல் ரூ.135 கோடி | 8 வருடங்களுக்கு பிறகு நாயகியாக திரும்பி வரும் ஆஸ்னா ஜவேரி | மறுபிரவேசம் தொடங்கி விட்டது : ஈடன் மகிழ்ச்சி |

போர் தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ், மமிதா பைஜூ, கே.எஸ். ரவிக்குமார், ஜெயராம், கருணாஸ், சுராஜ் வெஞ்ஜரமூடு ஆகியோர் இணைந்து நடித்துள்ள 'கர' படம் வருகின்ற ஏப்ரல் 30ம் தேதியன்று திரைக்கு வருகிறது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கியதை தொடர்ந்து இதற்கான புரொமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே கர படத்தில் இருந்து 'வாயா என் கரசாமி' என்கிற முதல் பாடல் வெளியாகி தற்போது வரை 1 கோடி பார்வையாளர்களைக் கடந்துள்ளது. இப்போது கர படத்தில் இருந்து இரண்டாவது பாடலை நாளை வெளியிடுகின்றனர். தனுஷ், மமிதா பைஜூ சம்மந்தப்பட்ட பாடலாக இது உருவாகி உள்ளது. இந்த போஸ்டரில் இந்த பாடலின் பெயர் மற்றும் எழுதியது யார்? பாடியது யார்? என்பதை எந்த விவரமும் குறிப்பிடவில்லை நாளை இந்த விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.




