சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

கடந்த வருடம் கொரோனா தாக்கம் ஆரம்பித்த சமயத்தில் இருந்தே, பலருக்கும் பலவிதமான உதவிகளை, தனது சொந்த செலவில் செய்து வருபவர் பாலிவுட் நடிகர் சோனு சூட். தற்போது கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்தமுறை மருத்துவ உதவிகள் பக்கம், தனது கவனத்தை திருப்பியுள்ளார். அதேசமயம் தற்போது தடுப்பூசிக்காக, மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்து பற்றி ஒரு கேள்வி எழுப்பியுள்ளார் சோனு சூட்
இதுபற்றி அவர் கூறும்போது, “ஒரு சிறிய கேள்விதான்.. ஒரு குறிப்பிட்ட மருந்து பெரும்பாலும் கிடைப்பதில்லை என்பது தெரிந்தே, மருத்துவர்கள் நோயாளிகளிடம் அந்த மருந்தை வாங்கி வரும்படி பரிந்துரை செய்வது ஏன்..? மருத்துவர்களுக்கே அந்த மருந்து கிடைக்காதபோது, சாதாரண மக்களுக்கு மட்டும் எப்படி கிடைக்கும்..? எளிதில் கிடைக்காத ஒரே குறிப்பிட்ட மருந்தையே பரிந்துரை செய்வதற்கு பதிலாக மாற்று மருந்து ஏதேனும் இருந்தால், அந்த மருந்தை பயன்படுத்தி மக்களின் உயிரைக் காக்க உதவலாமே” என்று கேள்வி எழுப்பியுள்ளார் சோனு சூட்