காசியில் தனுஷ்: கங்கைக்கு ஆரத்தி எடுத்து பிரார்த்தனை | ரீரிலீஸ் படத்துக்கு ஆதரவு கொடுக்காத ஹீரோக்கள் | 'நிஞ்சா' பட பூஜையில் நாய்: ஏன் தெரியுமா? | டேனியல் பாலாஜி இறந்தவிட்டார் என நம்ப முடியல: பிபி180 இயக்குனர் வேதனை | கடும் போட்டியை சந்திக்கப் போகும் 'ஜனநாயகன்' | 'ஸ்பைடர்' தோல்வி என் பயணத்தைத் தடுத்தது : ரகுல் ப்ரீத் சிங் | 'கைதி 2' எப்போது ஆரம்பமாகும் ? | நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | முதன்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்': இயக்குனர் லிங்குசாமி | கீர்த்தி சுரேஷ் வைத்த அன்பான கோரிக்கையை நிராகரித்த தனுஷ் |

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணவத். சமூக வலைத்தளங்களில் சுறுசுறுப்பாக இயங்கும் இவர் நாட்டு நடப்புகள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன் வைப்பார். இதனால் இவருக்கு எப்போதும் ஆதரவும், எதிர்ப்பும் இருந்து கொண்டே இருக்கும். பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் தற்கொலை தொடர்பாக மராட்டிய மாநில அரசுடன் நேரடியாக மோதியவர்.
இந்த நிலையில் தற்போது டில்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டம் குறித்து கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். ஒரு கட்டத்தில் டெல்லியில் போராடுவது விவசாயிகள் அல்ல தீவிரவாதிகள் என்றார். இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்த வெளிநாட்டு பிரபலங்களை முட்டாள்கள் என்றார். இதனால் இவரது சர்ச்சைக்குரிய கருத்துக்களை டுவிட்டர் நிறுவனம் நீக்கியது.
தற்போது கங்கனா தக்கட் என்ற பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் மத்திய பிரதேச மாநிலம் போதுல் மாவட்டத்தில் உள்ள சர்னி பகுதியில் நடக்கிறது. விவசாயிகளுக்கு எதிராக பேசி வரும் கங்கனாவின் படப்பிடிப்பை நடத்தவிட மாட்டோம் என்று அந்த மாநில காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இதனால் படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.