ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
பாலிவுட்டின் பிரபல கூட்டணியான இயக்குனர் ரோஹித் ஷெட்டி, நடிகர் அக்ஷய் குமார் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் 'சூர்யவன்ஷி'.. காத்ரீனா கைப் கதாநாயகியாக நடித்துள்ள இந்தப்படம் வரும் ஏப்-2ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது. ஆனால் தற்போது அதன் ரிலீஸில் புதிய சிக்கல் ஒன்று எழுந்துள்ளது.
அதாவது இந்தப்படம் ஓடிடிக்கு கொடுக்கப்படாமல் நேரடியாக தியேட்டர்களிலேயே தான் வெளியாக இருக்கிறது. ஆனால் மல்டிபிளெக்ஸ் தியேட்டர்களில் இந்தப்படத்தை திரையிடுவதில் லாப சதவீதம் குறித்த பேச்சுவார்த்தையில் சுமுகமான தீர்வு எட்டப்படவில்லை. அதனால் பிவிஆர், ஐநாக்ஸ், கார்னிவல் போன்ற மல்டிபிளெக்ஸ் தியேட்டர்களில் சூர்யவன்ஷி ரிலீஸாகது என்று சொல்லப்படுகிறது.
அதேசமயம் ஒற்றை தியேட்டர்களில் இந்தப்படம் ரிலீஸாவதில் எந்த சிக்கலும் இல்லையாம். இப்படி பிரச்சனைக்கு தீர்வு காணாமல் படத்தை வெளியிட்டால், அது இருதரப்புக்குமே நட்டத்தையே ஏற்படுத்தும் என விநியோகஸ்தர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.