பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் | பிளாஷ்பேக்: கல்கியின் நிறைவேறாத கனவு |

கடந்த 2023ல் மலையாளத்தில் குறைந்த பட்ஜெட்டில் வெளியான ஹாரர் திரில்லர் படம் ரோமாஞ்சம். அந்த வருடத்தின் மலையாளத் திரையுலகில் முதல் 50 கோடி வசூலித்த படம் என்கிற பெருமையை இந்த படம் பெற்றது. பஹத் பாசில் நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ஆவேசம் படத்தின் இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கியிருந்தார். இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதனை ஹிந்தியில் ரீமேக் செய்ய விரும்பிய பிரபல இயக்குனர் சங்கீத் சிவன், ‛கப்கபி' என்கிற பெயரில் ரீமேக் செய்தார்.
பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் சகோதரர் தான் சங்கீத் சிவன். மலையாளத்திலும் ஹிந்தியிலும் பல படங்களை இயக்கியுள்ளார். கடந்த ஜூன் மாதமே இந்த படம் வெளியாகும் என சொல்லப்பட்டது. அதேசமயம் துரதிர்ஷ்டவசமாக கடந்த வருடம் மே மாதம் சங்கீத் சிவன் எதிர்பாராத விதமாக காலமானார். இதனை தொடர்ந்து சில காலமாக தேங்கிக் கிடந்த இந்த படம் தற்போது வரும் மே 24ஆம் தேதி வெளியாக இருக்கிறது. பொதுவாக மலையாள திரைப்படங்கள் ஹிந்தியில் ரீமேக் ஆகும்போது வெற்றியை பெற தவறிவரும் நிலையில் இந்த கப்கபி திரைப்படம் புதிய முன்னுரையை எழுதுமா? பார்க்கலாம்.