லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
சமீபகாலமாக அரசியல் தலைவர்களின் வாழ்க்கை சினிமா ஆவது அதிகரித்துள்ளது. ஏற்கெனவே பிரதமர் மோடி, ஜெயலலிதா, மன்மோகன் சிங், ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி, உள்ளிட்ட பலரது வாழ்க்கை சினிமா ஆகியுள்ளது. தற்போது இந்திரா காந்தி, ராஜசேகர ரெட்டியின் யாத்ரா 2ம் பாகம் தயாராகி வருகிறது. அந்த வரிசையில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரியின் வாழ்க்கை வரலாறு, 'கட்காரி' என்ற பெயரில் படமாகி இருக்கிறது. நிதின் கட்காரியாக, ராகுல் சோப்ரா நடித்துள்ளார்.
இதுகுறித்து படத்தின் இயக்குனர் அனுராக் பூஜாரி கூறுகையில், “நிதின் கட்காரியின் அரசியல் பயணம் பலருக்குத் தெரியும். ஆனால், அவரது தனிப்பட்ட வாழ்க்கையும், இளமை காலமும் மிகவும் சுவாரசியமானவை. அந்த பயணத்தை பார்வையாளர்களுக்கு வழங்கும் முயற்சிதான் இது. மராத்தி மொழியில் தயாராகியுள்ள படம் விரைவில் திரைக்கு வருகிறது. இதர மொழிகளில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட இருக்கிறது. தற்போது படத்தின் இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன” என்றார்.