லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
பிரபல பாலிவுட் கலை இயக்குனரான நிதின் சந்திரகாந்த் தேசாய்(58) தனது ஸ்டுடியோவில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், பாலிவுட் திரையுலகினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாலிவுட்டில் 30 ஆண்டுகளுக்கு மேலாக கலை இயக்குனராக பணியாற்றி வருகிறார் நிதின் சந்திரகாந்த் தேசாய். ‛‛1942 ஏ லவ் ஸ்டோரி, தேவதாஸ், முன்னாபாய், ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் மும்பை, லகான்'' உள்ளிட்ட பல படங்களுக்கு கலை இயக்கம் செய்துள்ளார். 100 படங்கள் வரை கலை இயக்கம் செய்துள்ள இவர் மும்பையை அடுத்து கர்ஜாத் என்ற இடத்திற்கு அருகே 52 ஏக்கர் பரப்பளவில் சொந்தமாக என்டி ஸ்டுடியோஸ் ஒன்றையும் நிர்வகித்து வந்தார். இங்கு தான் ஜோதா அக்பர் உள்ளிட்ட பல பிரமாண்ட படங்கள் உருவாகின.
கலை இயக்குனராக மட்டுமல்லாது இயக்கம், தயாரிப்பு போன்ற பணிகளையும் அவர் செய்துள்ளார். கலை இயக்கத்திற்காக 4 முறை தேசிய விருது, பிலிம்பேர் உள்ளிட்ட பல விருதுகளை இவர் பெற்றுள்ளார்.
இந்நிலையில் இன்று(ஆக., 2) அவரது ஸ்டுடியோவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் நிதின் சந்திரகாந்த் தேசாய். தற்கொலைக்கான காரணம் முழுமையாக தெரியவில்லை. இருப்பினும் நிதி நெருக்கடி காரணமாக அவர் தற்கொலை செய்து இருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து மும்பை போலீசார் விசாரித்து வருகின்றனர்.