Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

25ம் வருடத்தில் சத்யா ; இன்னும் வருத்தம் தீராத ஊர்மிளா

04 ஜூலை, 2023 - 05:49 IST
எழுத்தின் அளவு:
Satya-in-the-25th-year;-Urmila-who-still-has-no-regrets

இயக்குனர் ராம்கோபால் வர்மா இயக்கத்தில் கடந்த 1998ல் ஹிந்தியில் வெளியான படம் சத்யா. அதுவரை வில்லன் நடிகராக நடித்து வந்த ஜே.டி சக்கரவர்த்தி இந்த படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்தியன் படத்தில் கதாநாயகிகளில் ஒருவராக நடித்த ரங்கீலா புகழ் ஊர்மிளா தான் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். ஒரு பக்காவான கேங்ஸ்டர் படமாக இது வெளியாகி மிகப்பெரிய வரவேற்பையும் வெற்றியும் பெற்றது. சொல்லப்போனால் ராம் கோபால் வர்மாவின் படங்களுக்கு என ஒரு தனி ரசிகர் வட்டத்தை பாலிவுட்டில் இந்த படம் ஏற்படுத்தியது.

இந்த படம் வெளியாகி நேற்றுடன் 25 வருடங்களை தொட்டுள்ளது. இந்த படம் குறித்து தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார் படத்தின் நாயகி ஊர்மிளா. அதேசமயம் இந்த படம் வெளியாகி 25 வருடங்களாகியும் அவர் இன்னும் ஒரு மனக்குறையுடன் தான் இருக்கிறார் என்பதையும் வெளிப்படுத்தி இருந்தார்.

இந்த படம் வெளியான சமயத்தில் தான் மிகவும் கிளாமரான கதாபாத்திரங்களில் நடித்து பிசியாக இருந்து வந்ததாகவும் அந்த சமயத்தில் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து பக்கத்து வீட்டுப் பெண் போன்ற கதாபாத்திரத்தில் கிளாமர் இல்லாமல் இந்தப்படத்தில் நடித்திருந்தேன். ஆனால் இதற்காக எனக்கு ஒரு விருது கூட கிடைக்கவில்லை. அது மட்டுமல்ல எந்த ஒரு விருதுக்கும் நான் நாமினேட் கூட செய்யப்படவில்லை என்பதுதான் வருத்தமாக இருக்கிறது என்று கூறியுள்ளார் ஊர்மிளா.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
வெளியானது  கரண் ஜோஹரின் 'ஆர்ஆர்கேபிகே' டிரைலர் - பூவெல்லாம் கேட்டுப் பார், ஜோடி' படங்களின் தழுவலா ?வெளியானது கரண் ஜோஹரின் ... அமெரிக்க படப்பிடிப்பில் விபத்து : ஷாருக்கானுக்கு மூக்கில் ஆபரேஷன் அமெரிக்க படப்பிடிப்பில் விபத்து : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)