ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளிப் போகிறதா இந்தியன் 2? | தீபிகா படுகோனேவை பிரிகிறாரா ரன்வீர் சிங் : பாலிவுட்டில் பரபரப்பு | விஜய்யின் கோட் படத்தில் நடிக்கிறாரா சிவகார்த்திகேயன்? | ராஜு மகாலிங்கத்தின் புதிய வீட்டிற்கு விசிட் அடித்த ரஜினி | சீரியல் நடிகை ஆர்த்தி சுபாஷ் வைரல் கிளிக்ஸ் | பாலாவின் காதலா? டிஆர்பி கேமா? - குழம்பிய ரசிகர்கள் | முடிவுக்கு வரும் ‛அருவி' சீரியல் | போலி கணக்கு துவங்கி ட்ரோல்களை சமாளித்த அனேகன் பட நாயகி | மனைவியுடனான விவாகரத்து குறித்து மனம் திறந்த விஜய் யேசுதாஸ் | சத்யராஜ் உடன் இருக்கும் இந்த சின்ன பையன் யார் தெரியுமா...? |
முன்னணி பாலிவுட் நடிகையான ஸ்ரத்தா கபூர் அவ்வப்போது ஒரு பாடலுக்கு நடனமாடுவார். அப்படி அவர் ஆடும் நடனங்கள் வைரலாகும், ஒரு பாடலுக்கு ஆடுவதற்கு ஒரு படத்திற்கான சம்பளம் வாங்குவார். நட்புக்காக சில படங்களிலும் ஆடியுள்ளார்.
இந்த நிலையில் பாலிவுட்டில் தயாராகி வரும் ஹாலிவுட் பாணியிலான ஓநாய் மனிதனை பற்றிய படமான பெடியா படத்தில் ஆடியுள்ளார். வருண் தவான் நடிப்பில் அமர் கவுஷிக் இயக்கத்தில், மேடாக் பிலிம்ஸ் தயாரிப்பில், ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் தினேஷ் விஜன் தயாரிப்பில் உருவாகும் படம் இது.
இதில் தும்கேசரிஞ் என்று தொடங்கும் பாடலில் ஆடியுள்ளார். கணேஷ் ஆச்சார்யா நடனம் அமைத்துள்ள இந்த பாடலில் வருண் தவான் - கீர்த்தி சனோன் ஆகியோருடன் ஸ்ரத்தா கபூர் ஆடியுள்ளார். சச்சின்-ஜிகார் இசையமைத்துள்ள இந்த பாடலுக்கு அமிதாப் பட்டாச்சார்யா வரிகள் எழுதியுள்ளார்.
இயக்குநர் அமர் கவுஷிக்கின் முந்தைய படமான 'ஸ்திரீ' யில் ஷ்ரத்தா கபூர் ஏற்கெனவே ஆடியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த படம் நவம்பர் 25 அன்று தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பான்-இந்தியா படமாக வெளியாகவுள்ளது.