ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
காஷ்மீரில் இந்து பண்டிட்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை மையமாக வைத்து சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் ‛தி காஷ்மீர் பைல்ஸ்'. அனுபம் கெர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். குறுகிய பட்ஜெட்டில் தயாராக இப்படம் 200கோடி வசூலை கடந்தது. இதையடுத்து இந்த பட கூட்டணி மேலும் இரண்டு படங்களில் இணைவதாக சமீபத்தில் அறிவிப்பு வந்தது.
இந்நிலையில் காஷ்மீர் பைல்ஸ் படத்தின் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார். இதுபற்றி ‛‛4 ஆண்டுகளாக நேர்மையுடன் கடுமையாக உழைத்து காஷ்மீர் பைல்ஸை உருவாக்கினோம். இந்த படத்தை பார்த்த அனைவருக்கும் நன்றி. புதிய படத்தை உருவாக்கும் நேரம் இது. ‛டில்லி பைல்ஸ்' '' என தெரிவித்துள்ளார்.
இதை வைத்து பார்க்கையில் அடுத்த படம் டில்லியில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து தயாராகலாம் என தெரிகிறது.