ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

ராம்கோபால் வர்மா தற்போது தகனம் என்ற வெப் சீரிசை தயாரித்து உள்ளார். இதில் இஷா கோபிகர் நடித்துள்ளார். அவருடன் நைனா கங்குலி, அபிஷேக் துஹான், அபிலாஷ் சவுத்ரி, சாயாஜி ஷிண்டே, அஷ்வத்காந்த் சர்மா, பார்வதி அருண் மற்றும் பிரதீப் ராவத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இதில் இஷா கோபிகர், அஞ்சனா சின்ஹா என்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். நைனா கங்குலி நக்சலைட்டாக நடித்துள்ளார். அபிஷேக் துஹான், ஹரி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அபிலாஷ் சவுத்ரி, நெகட்டிவ் கேரக்டரில் நடித்துள்ளார். சாயாஜி ஷிண்டே, சென்னா ரெட்டியாக நடித்துள்ளார்.
தொடர் குறித்து ராம்கோபால் வர்மா கூறியிருப்பதாவது: இது நான் இயக்கும் முதல் ஓடிடி தொடர். மகாத்மா காந்தி சொன்ன 'கண்ணுக்குக் கண் உலகையே குருடாக்குவதில்தான் வெற்றியடையும்', மகாபாரதத்தில் மேற்கோள் காட்டப்பட்ட 'பழிவாங்குதல் என்பது தூய்மையான உணர்ச்சி' என்ற இரு முரண்பாடான மேற்கோள்களுக்கு இடையில் உணர்வுப்பூர்வமான சம்பவங்களுடன் உருவாகியுள்ளது தான் இந்த கதை. இது வெறும் பழிவாங்கும் கதையல்ல, பழிவாங்கும் உணர்வின் கதையைச் சொல்கிறது. இது ஒரு க்ரைம் த்ரில்லர் அல்ல, ஆனால் இது உறைய வைக்கும், உணர்வுப்பூர்வமாக சிலிர்க்க வைக்கும், குற்றங்களைப் பற்றியது. என்கிறார் வர்மா.