Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » வரவிருக்கும் படங்கள் »

விஸ்வரூபம்

 • விஸ்வரூபம்
 • கமல்ஹாசன்
 • பூஜா குமார்
 • இயக்குனர்: கமல்ஹாசன்
17 பிப்,2013 - 18:13 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » விஸ்வரூபம்

  

தினமலர் விமர்சனம்


வெளிவருவதற்கு முன்பே தடை, தாமதமென்று உலகை விறுவிறுப்பாக பேச வைத்த "விஸ்வரூபம்", வெளிவந்த பின்பும் அதே உலகை வியக்கவும் வைத்திருக்கிறது! "உலக நாயகன் எனும் அடைமொழிக்கேற்ப கமல், உலக தரத்திற்கு தந்திருக்கும் உன்னதமான தமிழ்ப்படம் தான் "விஸ்வரூபம்"!

கதைப்படி கதக் நாட்டிய கலைஞரான கமல் அமெரிக்காவில் அழகிய இந்திய வம்சாளி இளம் பெண்களுக்கு கதக் கற்றுத்தருகிறார். பெண் தன்மையுடன் வாழும் கமலின் நடை, உடை, பாவனைகள் எதுவும் பிடிக்காமல், அமெரிக்கன் சிட்டிசன் எனும் பெருமையான அடையாளத்திற்காகவும், தனது உயர் கல்விக்காகவும் வயது வித்தியாசத்தை பொருட்படுத்தாமல் கமலை கட்டிக் கொண்டு மாரடிக்கும்(!) பூஜா குமாருக்கு, உடன் உள்ள ஒருவர் மீது ஒருவித ஈர்ப்பு ஏற்படுகிறது. அந்த ஈர்ப்புக்கு கமல் எதிர்ப்பு காட்டக்கூடாது... என்பதற்காக அவர்(கமல்) ஏதும் காதல் குற்றங்கள் செய்கிறாரா...?! என கண்காணிக்க ஒரு தனியார் துப்பறியும் நிபுணரை அமர்த்துகிறார்கள் பூஜாகுமாரும் அவரது காதலரும் சேர்ந்து!

அந்த துப்பறியும் நிபுணர் மூலம் கமல் இந்து அல்ல ஒரு இஸ்லாமியர் என்பதும், அந்த துப்பறியும் நிபுணர் கொல்லப்படுவதின் மூலம், கமல் அமெரிக்க சட்டத்திட்டத்திற்கு புறம்பாக ஏதேதோ... செய்கிறார் என்பதும் தெரியவருகிறது! அப்படியென்றால் கமல் தீவிரவாதியா...? எனக்கேட்டால் அதுதான் இல்லை... அதுதான் விஸ்வரூபம் படத்தின் கதையே...

அதாகப்பட்டது, கமல் ஒரு இந்திய ரா உளவுப்பிரிவு அதிகாரி. காஷ்மீரி அப்பாவுக்கும், தமிழ் அம்மாவுக்கும் பிறந்தவர். தலிபான் தீவிரவாதி வேடத்தில் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்து அவர்களுக்கு போர் பயிற்சிகளை கற்றுத் தருகிறார் கமல். அவர்கள் அனைவரது நம்பிக்கைக்கும் பாத்திரமாகி, அல்கொய்தா தீவிரவாதிகளுடன் சேர்ந்து கொண்டு, அமெரிக்காவை தகர்க்க தலிபான்கள் போடும் சதி திட்டத்தை, உதவியாளர் ஆண்ட்ரியா, உயர் அதிகாரி சேகர் கபூர் உள்ளிட்டோருடன் அமெரிக்கா போய் (ஆரம்பத்தில் அமெரிக்க போலீஸ்க்கு தெரியாமலும், அதன்பின் அமெரிக்க போலீஸின் உதவியுடனும்...) முறியடிப்பது தான் "விஸ்வரூபம்" படத்தின் வித்தியாசமும், விறுவிறுப்புமான மொத்த கதையும்!

இந்த கற்பனை கதையை காண்போர் கண்களும், கனத்த இதயங்களும் கூட மிரளும் வகையில் மிகமிக பிரமாண்டமாக அமெரிக்காவிலும், ஆப்கானிஸ்தானிலும் ஆங்கில படங்களுக்கு நிகராக படமாக்கியிருக்கும் காரணத்திற்காகவே கமலுக்கு "கங்கிராட்ஸ் சொல்லலாம்!

கதக், கலைஞர் விஸ்வநாத்தாகவும் சரி, விசாம் அகமது காஷ்மீரியாகவும் சரி, கமலால் மட்டுமே கலக்க முடியும் என்பதை "ஃபிரேம் டூ ஃபிரேம்" நிரூபித்திருக்கிறார் கலைஞானி கமல்ஹாசன். "என் மனைவிக்கு சிக்கனை பிடிக்கும், ‌எனக்கு என் மனைவியை பிடிக்கும்..." என்னும் சாதாரண வசனங்களில் தொடங்கி, "கடவுளுக்கு நான்கு கைகள் இருந்தால் சிலுவையில் எப்படி அடிக்க முடியும்...? அதனாலதான் நாங்க கடவுளை கடல்ல தூக்கி போட்டுவிடுவோம்..." எனும் சிந்திக்க தூண்டும் கூர்மையான வசனங்கள் ஒவ்வொன்றிலும் கமலின் குசும்பும், கூர்மையான கருத்துக்களும் படத்திற்கு மேலும் பலம் சேர்க்கின்றன.

பெண் தன்மையுடன் இருக்கும் கமல் தொழுகிறேன் பேர்வழி... என சடாரென்று வில்லன்களை பந்தாடி தன் மனைவி பூஜா குமாருடன் தப்பிக்கும் இடத்தில் தொடங்கும் விறுவிறுப்பு விஸ்வரூபம் படத்தின் இறுதி வரை தொடர்வது படத்தின் பெரும் பலம். அந்த இடத்தில் ரசிகர்களின் வாய்கள், தம்மையும் அறியாமல் கமல் - கமல் தான் என முணுமுணுப்பதும், காதை பிளக்கும் விசில் சப்தமும், கைதட்டல்களால் அரங்கு அதிர்வதும் கண்கூடு.

கமல் மாதிரியே தீவிரவாதி உமராக வரும் ராகுல் போஸ், கமலின் உயர் அதிகாரி சேகர் கபூர், கமலின் மனைவி நிருபமாக வரும் பூஜாகுமார், உதவியாளர் சஸ்மிதாக வரும் ஆண்ட்ரியாவும், நாசர், சலீம்(ஜெய்தீப்) உள்ளிட்ட ஒவ்வொருவரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர். பலே!பலே!!

ஆப்கானிஸ்தான் மலை பிரதேசங்கள், அமெரிக்காவின் அழகிய நகரங்கள், வானில் சீறிப்பாயும் ஹெலிகாப்டர்கள், ஏவுகணைகள், துப்பாக்கி ரகங்கள் உள்ளிட்ட எல்லாவற்றையும் த்தரூபமாக நம் கண்களுக்கும், காதுகளுக்கும் விருந்தாக்கியிருக்கும் சானுஜான் வர்கீஸின் ஒளிப்பதிவும், குணால் ராஜனின் ஒலிப்பதிவும், சங்கர்-ஹாசன்-லாயின் இசைப்பதிவும், மதுசூதனனின் விஷூவல் எபக்ட்ஸூம், கெளதமியின் உடை அலங்காரங்களும், லால்குடி இளையராஜாவின் கலை-இயக்கமும், மகேஷ் நாராயணனின் படத்தொகுப்பும், விஸ்வரூபத்தின் பிரம்மாண்டங்கள் பெரும் ப்ளஸ் பாயிண்டுகள்.

இந்தப்படத்தை இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் எதிர்த்ததைவிட இந்துக்கள் தான் எதிர்த்திருக்க வேண்டும்... என சொல்லாமல் சொல்லும் சில காட்சிகளை விஸ்வரூபத்தில் கமல் வலிய திணித்திருப்பதும், அதை., இந்துக்கள் எதிர்க்காததும் ஏன் என்பது புரியாத புதிர்...!!

விஸ்வரூபத்தை முழுநீள் ஆக்ஷ்ன் படமாக தந்திருக்கும் கமல், ரொமான்ஸ் காட்சிகளில் வழக்கம் போல் கவனம் செலுத்தாதது கமல் ரசிகர்களை சற்றே ஏமாற்றம் கொள்ள செய்தாலும் உலகதரத்திற்கு ஒரு தமிழ்ப்படம் தந்திருப்பதற்காக கமலுக்கு "ஹேட்ஸ் ஆப் சொல்லலாம்!

மொத்தத்தில் "விஸ்வரூபம்" கமலின் "வியத்தகுசொரூபம்"! "வெற்றிரூபம்"!!


--------------------------------------------------------


குமுதம் சினி விமர்சனம்அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தைச் சிதைக்க எதிரிகள் போடும் சதித் திட்டத்தை இந்திய உளவாளி கமல் முறியடிக்கும் சாகசக் கதை.

கதக் நாட்டியக்காரராக இருக்கும்போது பெண்மையின் நளினம், எதிரிகளைக் கண்ணாலேயே ஈர்க்கும் மாய்மாலம், ஒன்றும் தெரியாத குழந்தை போல காட்சி தரும் முஸ்லிம் வேடம், அவர் யார் என்று தெரியும்போது ஏற்படும் அசுரத்தனம், உளவாளியாக மாறும்போது உண்டாகும் ஹீரோத்தனம் என்று உலக நாயகன் என்றால் சும்மாவா? மனிதர் விஸ்வரூபத்தில் தசாவதாரத்தையும் காட்டுகிறார்.

அதுவும் அவரது மனைவி, வேறு தொடர்பில் இருப்பது தனக்கு தெரியும் என்பதைக் காட்ட கண்ணை விழித்துக் கொண்டே குறட்டை விடும் அந்த ஒரு காட்சி போதுமே! க்ளாஸ்!

நடிகராக உழைத்ததைப் போலவே இயக்குநராகவும் அதே அளவு கமல் பங்காற்றியிருப்பது பளிச்சென்று தெரிகிறது. காட்சியமைப்புகள், கேமரா கோணங்கள், ஒரு கண் அசைவிலேயே சீனை நகர்த்தும் ஜாலவித்தைகள், லொக்கேஷன்கள் என்று ஒவ்வொன்றிலும் அவரது உழைப்பு உ.கை.நெ!

பூஜா குமார் யதார்த்தம், தன் கணவன் தனக்கு பொருத்தமில்லை என்று நினைத்துத் தடுமாறும்போது, பின்னர் அவர் எப்படிப்பட்ட நபர் என்பதைப் புரிந்து கொண்டு, மிரண்டு திரும்பும்போது சரியான பேலன்ஸ்.

ஆண்ட்ரியா படம் முழுக்க சும்மா வருகிறார். கதக் நடனத்தில் அழகாக இருக்கிறார். அவ்வளவுதான். தலைவர், ஒரு கிஸ்ஸாவது அடித்திருக்கலாம்!

முல்லா உமராக வரும் ராகுல் போஸ் மனதில் பதிகிறார். டப்பாவில் இருந்து கண்ணைச் சுத்தம் செய்து அணிந்து, தொண்டையின் அடி ஆழக் குரலில் பேசும்போதே ஒரு அச்சம் ஏற்படுகிறது பலே.

ஆப்கானிஸ்தானில் டாக்டராக ஆசைப்படும் சிறுவன், அதைத் தடுக்கும் தந்தை சும்மா கையை வைத்து சுடுவது போல பாவனை செய்ய, அந்த டிஷ்யூம் ஒவ்வொருவருக்காகத் தொற்றிக் கொள்ளும் காட்சியும், அந்தச் சிறுவனை ஊஞ்சலாட வைக்க கமல் முயல, அவன் நகர்ந்துவிட, மறுநாள் தற்கொலை வெடிகுண்டாக மாறப்போகும் இளைஞன் குழந்தைமாதிரி ஊஞ்சல் ஆடுவதும் கவிதை.

படம் முழுக்க சீரியஸ்தனத்தையும் தாண்டி மெலிதாக ஆக்கிரமிக்கும் புன்முறுவல் தரும் சுவையை கையாண்டிருக்கும் நேர்த்தி கமல்ஹாசனைத் தவிர யாருக்கும் வராது. அமெரிக்க ஜால்ராவைக் குறைத்திருக்கலாம்.

அம்மாஞ்சி மாதிரி இருக்கும் கமல், கை கட்டை அவிழ்த்தவுடன் தொழுகையை முடித்துவிட்டு, சிங்கமாய்ச் சீறிப்பாய்ந்து எதிரிகளைப் பந்தாடும் காட்சி மெய்சிலிர்க்க வைக்கிறது.

கரகரவென கழுத்து அறுபடும் காட்சி, பாதி உடல் மட்டும் துடிக்கத் துடிக்க வந்து விழும் காட்சி, கை துண்டாகும் காட்சி என்று சில நிழல்கள் மனத்தை கூறுபோடுகின்றன.

சானு வர்கீஸின் ஒளிப்பதிவு மெய்மறக்க வைக்கிறது. அமெரிக்காவாகட்டும், ஆப்கானிஸ்தானத்து செட்டாகட்டும் நிஜமாகவே எதிரில் அது இருப்பது போல் காட்டியிருப்பதற்கு கைதட்டலாம்.

“உன்னை காணாத’ கதக் பாடலில் கமல் காட்டும் பாவத்தையும், நளினத்தையும் வேறு எந்த நடிகராலும் சத்தியமாகச் செய்ய முடியாது. அந்தக் காட்சியமைப்பும் கொள்ளை கொள்கிறது. இசை சங்கர் எசான் லாய். ரீரெக்கார்டிங்கில் காட்சிகளுடன் போட்டி போட முடியாமல் திணறுவது தெரிகிறது.

கடைசிக் காட்சியை காணும்போது கமல் பார்ட் - 2 வை முக்கால்வாசி எடுத்து முடித்து பாக்கெட்டில் வைத்திருக்கிறார் என்றே தோன்றுகிறது. அது இந்தியாவில் நடக்கப் போவதால் யாரும் கவலைப்பட வேண்டாம், கமல் இங்கேயேதான் இருக்கப் போகிறார்.

விஸ்வரூபம் - தமிழில் ஓர் உலகப் படம்!

ஆஹா: கமல் கமல் கமல்
ஹிஹி: அங்கங்கே குழப்பும் காட்சியமைப்புகள்

குமுதம் ரேட்டிங்: நன்று

வாசகர் கருத்து

siva - bangalore,இந்தியா
15 மார்,2013 - 19:57
siva மிஸ்டர் கமல் ................... உங்களிடமிருந்து ஆங்கில படத்துக்கு இணையான படம் அல்ல அதை விட பிரம்மாதமான தமிழ் அல்லது இந்திய படத்தை எதிர்பார்க்கிறோம்...விஸ்வரூபம் படம் ஆங்கில படங்களை பார்த்து நீங்கள் போட்டு கொண்ட சூடு அதில் கதக் நடன கலைஞராக வரும் காட்சிகள் மட்டும் கொஞ்சம் வித்தியாசம் ஆனால் அதில் புதுமை என்று எதுவுமில்லை ...விருதுகளை வாங்கி குவிக்க தேவையான வித்தியாசங்கள் எதுவுமில்லை
rajmd - sikkal  ( Posted via: Dinamalar Android App )
06 மார்,2013 - 22:14
rajmd தயவு செய்து அடுத்த படத்தி்லாவது muslim களை நல்லவர்களாக காட்டுங்கள். kamal..
pavan - chennai,இந்தியா
05 மார்,2013 - 00:03
pavan pavan பாராட்டபடவேண்டியது.
paamaran - covai,இந்தியா
01 மார்,2013 - 20:30
paamaran உன்னை அமெரிக்கன் அடுத்த படம் எடுக்க சொன்னது பெரிய விசயமே இல்லை..படம் முடிந்த பின் வுலகமே உன்னை திரும்பி பார்க்கும் என்பதில் வியப்பு இல்லை. படம் இல்ல இது உன் உண்மையான விஸ்வரூபம் thaan இது.
sakthi - thiruvarur,இந்தியா
24 பிப்,2013 - 20:59
sakthi நல்ல படம்
sakthi - thiruvarur,இந்தியா
24 பிப்,2013 - 20:57
sakthi சூப்பர் movie
mirudan - kailaayam,இந்தியா
22 பிப்,2013 - 11:01
mirudan விஸ்பரூப இரண்டாம் பாகத்தில் திரைக்கதைக்கு முக்கியத்துவம் கொடுங்கள், திரைக்கதையை கொட்டிவிடுவது உங்கள் படங்களில் வாடிக்கையாக இருக்கு. பாக்யராஜ் , பாலசந்தர், போன்றவர்களின் ஆலோசனையை கேளுங்கள்
mirudan - kailaayam,இந்தியா
22 பிப்,2013 - 10:58
mirudan படத்தில் ஆப்கானிஸ்தானை பற்றி இன்னும் நிறைய காட்டி இருக்கலாம், கைபர் போலஸ் கணவாய் வழியாக போவதாக டைட்டில் போட்டு காட்டி இருக்கலாம், தலிபான்களை பற்றி பத்திரிகைகளில் வந்ததை தான் படத்தில் சொல்லியிருக்கிறார், அமெரிக்க போலிசை தமிழ் நாட்டு போலிஸ் அளவிற்கு தரம் தாழ்த்தி விட்டார், கமல் நல்லவரா கெட்டவரா என அமெரிக்க போலிஸ் மண்டை காயும் அளவிற்கு காட்சிகளை அமைத்து இருக்கலாம், அமெரிக்க போலிஸ் வந்த விறகு கமல் துணை நடிகர் என்ற அளவிற்கு காட்சிகள் அமைந்து விட்டது மனதிற்கு வருத்தமாக இருக்கு. இதில் மன்மோகன் சிங்க் மாதிரி மிமிக்கிரி, அமெரிக்க போலிஸ் முன்பே தொழுகை செய்வது காமெடி காட்சியாக தான் தெரிகிறது
mirudan - kailaayam,இந்தியா
22 பிப்,2013 - 10:46
mirudan நான் நேற்று லீவு எடுத்து மிகுந்த எதிர்பார்ப்புடன் படம் பார்த்தேன், பிரேம் டு பிரேம் பிரமாண்டமாக படித்ததை எடுத்து திரைக்கதையை கோட்டை விட்டு விட்டார் கமல், கதாநாயகின் அறிமுகம், தலைமுடியை வெடி கொள்ள ஜட்டியை கழட்டுவது, தொழுகை நடத்துவது போன்ற பல காட்சிகளை தவிர்த்து படத்தை இன்னும் பத்து நிமிடங்கள் அதிகரித்து இருந்தால் இன்னும் நல்ல இருந்து இருக்கும் . பொதுவாக கமல் படங்களை ஒருமுறைக்கு இரண்டு முறை பார்த்தால் தான் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதையே அறிய முடிகிறது. கமலின் பல படங்கள் திரைக்கையால் தான் வசூல் சாதனை செய்ய முடியாமல் போகிறது என்பதே என் கருத்து
Srinivasan M - Madurai,இந்தியா
21 பிப்,2013 - 16:54
Srinivasan M This is a Superb Tamil movie with Hollywood standard. Viswaroopam promotes the tamil movie to the next level in both technical and commercial aspects. Excellent Kamal Sir Go ahead - Er.M.Srinivasan,Madurai,India.
Saravanan - Ambasamudram,இந்தியா
21 பிப்,2013 - 09:19
Saravanan படம் அருமையாக இருக்கிறது. வீடு ஏலம் போகும் அளவுக்கு பிரச்சனையில் சிக்கிய கமல், இப்போது மிகுந்த ஆனந்தத்துடன் இருப்பார். இன்னுமோர் புதிய பெரிய இல்லம் சென்னையில் வாங்குங்கள். அங்கு ரசிகர் மன்றத்தின் தலைமை இடம் அமைய விரும்பிகிறேன். கலைஞனுக்கும் கலைக்கும் எப்போதும் வீழ்ச்சி கிடையாது என்பது தான் வரலாறு சொல்லும் பாடம். அதில் ஒரு புதிய வரி உங்களால் எழுதபட்டு உள்ளது. அனைவருக்கும் மகிழ்ச்சி. அன்பே சிவம் ஆகுக...
mahesh - tamilnadu,இந்தியா
21 பிப்,2013 - 07:53
mahesh very good movie. worth to watch. technically very sound. kamal is amazing as an actor, director. hats off to him. mahesh
RAMCHARAN - thiruvannamalai,இந்தியா
20 பிப்,2013 - 12:06
RAMCHARAN முதல் சாங் படத்துக்கு ஒரு ஆஸ்கார் அவார்ட்& உன்னை பெற்றதில் பெருமை கொள்ளுது நாடு
20 பிப்,2013 - 10:15
இருமேனி_செ.செய்யது உஸ்மான் மலேசியாவில் விஸ்வரூபம் தமிழ்த் திரைப்படம் 18 காட்சிகள் தணிக்கை செய்யப்பட்டு 19/02/2013 முதல் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. (நன்றி:மலேசிய நண்பன் நாளிதழ் 20/02/2013 புதன் கிழமை)
PREMALATHA - KANCHIPURAM,இந்தியா
19 பிப்,2013 - 16:17
PREMALATHA I am really enjoyed viswaroopam technical aspect..especially kamal..bcos he bared all the pain of production,direction,story,acting and ion of technicians... I hope kamal will succeed in Hollywood with team work...Hollywood success is more important than anything....this is a good chance that world people will realise our creativity..Please dont miss this chance.....
mirudan - kailaayam,இந்தியா
19 பிப்,2013 - 11:00
mirudan தியேட்டருக்கு சென்று படம் பார்ப்பது அரிதாகி வந்த சூழ்நிலையில் ஜெயலலிதா அவர்களின் முயற்சியில் தியேட்டருக்கு போய் படம் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாகிவிட்டார். உண்மையில் கமல் ஜெயலலிதாவிற்கு தான் நன்றி சொல்ல வேண்டும்
T.Pandiaraj - Coimbatore,இந்தியா
18 பிப்,2013 - 17:18
T.Pandiaraj விஸ்வரூபம் நான்கு முறை பார்த்து விட்டேன் எங்கள் குடும்பத்துடன். கோவை சென்ட்ரல், FUN CINEMA - 2 times, KG BIG சினிமா. First time i have watch this film as a fan of Kamal. But, 2,3 & 4 i have enjoy this movie frame by frame. it is wonderful film. we are waiting for Viswaroopam - II Part very soon. Thanks kamal sir, By T.Pandiaraj, Coimbatore.
Ravichandran Velusamy - karur,இந்தியா
18 பிப்,2013 - 16:58
Ravichandran Velusamy உலக நாயகனின் உழைப்பிற்கு கிடைத்த வெற்றி .
Arumugam - Paris,பிரான்ஸ்
18 பிப்,2013 - 15:54
Arumugam இஸ்லாமிய இயக்கங்கள் இந்த படத்திற்கு நல்ல விளம்பரத்தை தந்து விட்டார்கள். இல்லையேல் இந்த படமும் "கடல்" படத்தின் நிலையை அடைந்திருக்கும். இந்த படத்தை ரசித்தவர்கள் அனைவரும் ஆங்கில இலக்கியத்திலும்,அரபிய மொழியிலும் புலமை வாய்ந்ததோடு, அமெரிக்கா ஆப்கானிஸ்தான் வாழ்க்கை முறை நன்கு அறிந்தவர்களாக இருக்கலாம்.
mohan - muscat,ஓமன்
17 பிப்,2013 - 17:58
mohan கமல் சார் மீண்டும் அன்பே சிவம் மாதிரிபடம் தேவை ப்ளீஸ்
indiashaj - chennai,இந்தியா
16 பிப்,2013 - 19:19
indiashaj ரெண்டு காதுக்கு உள்ளேயும் குண்டு வெடிக்கிற சத்தம் கேட்டுக் கிட்டே இருக்கு
தேவலிங்கம் - madurai,இந்தியா
16 பிப்,2013 - 13:52
 தேவலிங்கம் இந்த படம் ஒரு நல்ல பாடம்......,
பிரேம் குமார் vb - madurai,இந்தியா
16 பிப்,2013 - 12:44
 பிரேம் குமார் vb படத்துல எல்லாமே சூப்பர் படம் விஸ்வரூப வெற்றி பெற்று விட்டது.
mahendran - tirupur,இந்தியா
16 பிப்,2013 - 10:00
 mahendran படம் பார்த்தேன் சூப்பர் படம் ...கமல் சார் கிரேட் படம் பார்க்க தெரியதவின்கதான் நேகடிவ கமெண்ட் சொல்லுவாங்க
தமிழன் - dammam,சவுதி அரேபியா
16 பிப்,2013 - 09:42
 தமிழன் கமல் ஒரு மிகச் சிறந்த கலைஞன். ஆனால் ஆஸ்கார் அவார்ட் வாங்க வேண்டும் என்பதற்காக எடுக்கப்பட்ட படம். தொழில் நுட்பத்தில் கவனம் செலுத்திய கமல் கதையில் கோட்டை விட்டு விட்டார்.
siva - pondy,இந்தியா
16 பிப்,2013 - 09:34
 siva கமலின் விஸ்வரூபத்தை கண்டு ப்ரிமித்து நிற்கிறேன் இது போன்ற ஒரு உலக தரமிக்க படத்தை வேறு யாராலும் உருவாக்க முடியாது
balaji.g - Chennai,இந்தியா
16 பிப்,2013 - 09:07
 balaji.g Dear Kamal Sir GREAT!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!. YOU HAVE TAKEN TAMIL CINEMA TO THE WORLD LEVEL. I ASSURE VISVAROOPAM WILL MAKE RECORD IN THE BIOX OFFICE ABOVE 300 CRORE MARK. HATS OF YOU KAMAL. GOD BLESS YOU. KIND REGARDS G BALAJI 9445908915
maniampi - malaysia,இந்தியா
16 பிப்,2013 - 07:56
 maniampi நல்ல படம் யார் என்று புரிகிறதா
ஜேந்திரன் - Zürich,சுவிட்சர்லாந்து
16 பிப்,2013 - 03:43
 ஜேந்திரன் படம் சூப்பர்
sudhakar - salem,இந்தியா
15 பிப்,2013 - 21:06
 sudhakar ஹாலிவுட் திரும்பி பார்க்க வாய்த்த கமலுக்கு நன்றி, இப்படம் வருவதற்கு முன் தடை பல கடந்தது,முக்கிய தடை முஸ்லீம்ஸ், ஏன் இவர்கள் தடை செய்ய வேண்டும் அதற்காக நான் வருத்த பட்டேன்.
கார்த்திகேயன்.கி - krishnagiri,இந்தியா
15 பிப்,2013 - 19:18
 கார்த்திகேயன்.கி வெற்றி படமாக வேண்டியதை, மாபெரும் மகத்தான வெற்றி படமாக்க வைத்த எதிர்ப்பாளர்களுக்கு மிக்க நன்றி.
prabhu - dammam,சவுதி அரேபியா
15 பிப்,2013 - 16:41
 prabhu ஓனே அன் ஒன்லி கமல் சார் .
Ramesh - Chennai,இந்தியா
15 பிப்,2013 - 16:25
 Ramesh Supervvvvvv Movieee...
ரவிச்சந்திரன் - Thoothukudi,இந்தியா
15 பிப்,2013 - 15:22
 ரவிச்சந்திரன் கமல் சார் இந்தப்படம் உங்கள் மகுடத்துக்கு கிடைத்த வெற்றி.
விஜய் நதியா - singaapore,சிங்கப்பூர்
15 பிப்,2013 - 14:19
 விஜய் நதியா அன்புள்ளம் கொண்ட கமல் அவர்களுக்கு , படம் பார்த்தேன் ரசித்தேன் மீண்டும் பார்த்தேன் ரசித்தேன் , நீ உலக நாயகன் என்பது மீண்டும் உலகத்திற்கு சொல்லி இருக்கிறாய் ! உன் திறமையை மதித்து தியேட்டரில் படம் பார்த்தேன் , விஸ்வரூபமாக ஜொலிக்கிறாய் ... உனக்கு எதிரி உண்டு ? என்று இப்போதுதான் உலகத்திற்கு தெரியும் ... உன் படத்திற்கு வந்த பிரச்சினையால் தமிழ் நாட்டில் அரசியல் மாற்றம் பெரும்..... நன்றி மீண்டும் ஒருமுறை நல்ல படம் பண்ணியதற்கு .... விடாதே உன் பின்னால் இந்த உலகம் நிற்கும் ... தமிழ்நாடு மட்டுமில்லை உலகமே உன்னை தாங்கும்.... உண்மையுள்ள தமிழன் விஜய் நதியா...
surenthar - kaf,ஆப்கானிஸ்தான்
15 பிப்,2013 - 12:27
 surenthar யாரென்று தெரிகிரதாஆஆஆஆஆஆஆ
bagath - tiruchi,இந்தியா
15 பிப்,2013 - 12:03
 bagath இது போன்ற படங்கள் இனி .......................................................................................................
ராஜன்SUBRAMANIAN - DUBAI U.AE,இந்தியா
15 பிப்,2013 - 11:26
 ராஜன்SUBRAMANIAN கமல் சார் இந்த படம் பார்த்தேன், ரொம்ப நல்லா இருந்துச்சு. சூப்பர் அண்ட் பெஸ்ட் ஆப் லக் நெக்ஸ்ட் movie
ponnuswamysubramani - TIRUR VIL AND POST,இந்தியா
15 பிப்,2013 - 11:25
 ponnuswamysubramani பிரமாதம்... டயலாக் மட்டும் சரியாக புரியவில்லை...ப்ளீஸ் ட்ரை டு கிவ் இன் புல் அண்ட் புல் தமிழ் நெஸ்ட் டைம். ஆல் தி பெஸ்ட்
ர.Rajesh - CHENNAI,இந்தியா
15 பிப்,2013 - 11:18
 ர.Rajesh பிரமிப்பாக இருந்தது கமல்ஜி உங்களுக்கு நிகர் நீங்க தான் ரொம்ப பெருமையா இருக்கு நானும் தமிழனா பிறந்ததற்கு
ரவிச்சந்திரன் - trichy,இந்தியா
15 பிப்,2013 - 10:56
 ரவிச்சந்திரன் இமயத்தை கடந்தவன் நீ! எங்கள் இதயத்தை கவர்ந்தவன் நீ! இன்னுமோர் நூறாண்டு!வாழ்வாய் எண்ணம்போல் வையம் ஆண்டு!
bala - madurai,இந்தியா
15 பிப்,2013 - 10:27
 bala கமல் சொல்றார் கடவுள் இல்லைன்னு அவருக்கு தெரியல அது கமல் ரூபத்தில் விஸ்வரூபம வந்திருக்கு ஜெய்கிந்த்
gowsigan - jaffna,இலங்கை
15 பிப்,2013 - 00:24
 gowsigan தமிழ்நாட்டில் பல தடைகளை தாண்டி விஸ்வரூபம் வெற்றிகரமாக ஓடுவதை போல இலங்கையிலும் நல்ல வரவேற்ப்பு.......குறிப்பாக அதிகளவான சிங்களவரும் படத்தை பார்க்க வருகின்றனர்.
அஜாத சத்ரு AK - coimbatore,இந்தியா
14 பிப்,2013 - 21:23
 அஜாத சத்ரு AK கமல் சார் இந்த படம் பார்த்தேன், ரொம்ப நல்லா இருந்துச்சு. சூப்பர் அண்ட் பெஸ்ட் ஆப் லக் நெக்ஸ்ட் movie
s t rajan - ettayapuram,இந்தியா
14 பிப்,2013 - 19:59
 s t rajan நல்ல படம், ஆங்கில படம் பார்த்த மாதிரி இருந்தது.......
app saravanan - coimbatore,இந்தியா
14 பிப்,2013 - 19:09
 app saravanan ஹாசன் தி கிரேட்
veera - mannai,இந்தியா
14 பிப்,2013 - 16:54
 veera வாவ்...சூப்பர் movie
ப. முருகவேல் - Dubai,இந்தியா
14 பிப்,2013 - 16:42
 ப. முருகவேல் எப்பொழுது இங்கு துபாயில் ரிலீஸ் ஆகும் ?
மொதமேது - CHENNAI,இந்தியா
14 பிப்,2013 - 14:54
 மொதமேது கமல் போல் வருமா சூப்பர் THALAIVA
muhilan - tenkasi,இந்தியா
14 பிப்,2013 - 13:23
 muhilan movie super
Ganesh - chennai,இந்தியா
14 பிப்,2013 - 13:05
 Ganesh பத்மஸ்ரீ த.கமலகாசன் மீண்டும் ஒரு முறை நிருபித்திருக்கிறார் உலகநாயகன் என்று ஹட்ட்ஸ் ஒப் டு யு
P. Aruchamy Udaympalayam - Coimbatore,இந்தியா
14 பிப்,2013 - 11:47
 P. Aruchamy Udaympalayam அப்பா அப்பப்பா எவ்வளவு வினோதமான மனிதர்கள். விமர்சனம் என்ற பெயரில் திண்ணையில் உற்காந்து வெறும் வார்த்தையில் மாடி வீடு கட்டுதுகள். முதலில் சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவுக்கே கொட்டுகிற கமலை பார்த்து என்ன என்ன கேள்விகள். நல்ல வேளை அவர் அப்பா போய்ட்டார். பிராமணராக பிறந்து முஸ்லிம் நண்பனின் நினைவாக ஹாசன் பெயரினை தங்கள் செல்வங்களுக்கு இணை பெயராக வைத்த இந்த இன்றைய முஸ்லிம்கள் எதிர்த்து கண்டு மிகவும் வருந்தி இருப்பார். இந்த கூப்பாடு போடும் கோஷ்டிகள் எந்த சினிமா படத்தை பார்த்தவுது திருந்தியது அல்லது வருந்தியது உண்டா. இது வரை இந்திய சினிமாவில் வராத நிகழ்வுகளை எத்தனை காட்சிகளை இந்த படத்தில் கண்டோம். இது ஒன்றும் holywoodin உச்சம் என்று சொல்லலை/ இந்திய படங்களின் உச்சம் என்று தானே சொல்லுகிறார். ஒன்று holywood படத்தோடு ஒப்பிடுகிறாய் அல்லது புனிதராக மாறி தமிழ் படத்தோடு கூறு போடுகிறாய். என்ன கொடுமை சரவணா இது. கமல் ஒரு வேண்டுகோள். Dogs Parks, but Caravan process. உங்களின் பாடலையே சொல்லுகிறேன்/ வீழ்வது நாமாயினும் வாழ்வது தமிழாகட்டும். நன்றி நீ இன்னும் உயர ஒரு தமிழனின் நல்வாழ்த்துக்கள்.
சதீஷ் - madukkur,இந்தியா
14 பிப்,2013 - 11:46
 சதீஷ் கமல் படம். சூப்பர் மூவி.
யோகேஷ் - Chennai,இந்தியா
14 பிப்,2013 - 11:20
 யோகேஷ் Very gud effort. All the very best for Vishwaroopam2...
பாலாஜி - chennai,இந்தியா
14 பிப்,2013 - 10:47
 பாலாஜி படம் சூப்பர் fit சூப்பர் கமல் இஸ் கிரேட் iam வைட்டிங்க் பார்ட்- 2
ayyanar - ariyanayagipuram,இந்தியா
14 பிப்,2013 - 09:51
 ayyanar Super
பாலாஜி - chennai,இந்தியா
14 பிப்,2013 - 09:20
 பாலாஜி சூப்பர் movie..
durairaj - thiruvarur,இந்தியா
14 பிப்,2013 - 09:10
 durairaj கமல் கற்று த்திரிய எதுவும் இல்லை
சுரேஷ் - Singapore,இந்தியா
14 பிப்,2013 - 09:07
 சுரேஷ் உலக நாயகன் பேருக்கு தகுந்த படம் எடுத்தான் என் தலைவன் . கமலுக்கு உள்ள அக்கறை 20% இந்தியன்னுக்கு இருந்தால் நாம் அனைவரும் ஓர் சமுதாயம் . அவர் பார்க்கும் கடவுளை பேசுகிறார் .நாம் பார்க்காத கட்வுளுக்ககாக சண்டை போடுகிறோம்.
Narayanan Aiappan - Kuala Kangsar,மலேஷியா
14 பிப்,2013 - 00:33
 Narayanan Aiappan இன்னும் படம் பார்கவில்லை. ஆனாலும் காட்சிகள் நன்றாக இருக்கின்ன்றன.வாழ்த்துகள்பிறவி கலைஞன் வாழ்க.
raju - dammam,சவுதி அரேபியா
13 பிப்,2013 - 19:52
 raju அனொதெர் மெகா ஹிட் விஷ் டு kamalhassan
n j s - surrey,யுனைடெட் கிங்டம்
13 பிப்,2013 - 19:51
 n j s all the best to kamal
ச.அரவின்தகுமார் - bangalore,இந்தியா
13 பிப்,2013 - 19:26
 ச.அரவின்தகுமார் ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி, சூப்பர் கமல் ஹாசன்.
moorthy - hyderabad,இந்தியா
13 பிப்,2013 - 17:49
 moorthy படம் பார்த்தபின் மிக மிக நன்றாக புறிந்தது சுயநல அரசிலுக்காக சிலர் இதை பயன்படுத்த நினைத்தது. எவன் திறமையும் எவனாலும் அமுக்கமுடியாது
பிரபு - madurai,இந்தியா
13 பிப்,2013 - 15:47
 பிரபு GOOD MOVIE. HATS OFF "OUR WORLD HERO KAMAL SIR"
J ரக்ஹுராமன் - SATCHIYAPURAM SIVAKASI,இந்தியா
13 பிப்,2013 - 15:29
 J ரக்ஹுராமன் நாட்டிற்கு ஒவ்வொரு விடியலும் புதியது உன் ரசிகனுக்கு உனது படைப்பு ஒவ்வொன்றும் புதியது - ரகுராமன் சிவகாசி
கே.விமல்.கே. - COIMBATORTE,இந்தியா
13 பிப்,2013 - 14:45
 கே.விமல்.கே. வி ஆர் வைடிங் பார்ட் 2
ரவிசங்கர் - chennai,இந்தியா
13 பிப்,2013 - 14:35
 ரவிசங்கர் கமல் பண்ண ஒரே தப்பு, இந்த படத்தை தமிழில் எடுத்தது. லட்டு ஜாங்கிரி-ன்னு படம் பாராற்றவங்க நிறைய பேர் இங்க உண்டு. இந்த படத்திற்கு பதில் மதன காம ராஜன் part II எடுத்தால் 'ஓஹோ' ன்னு ஓடி இருக்கும். 'விதி வலியது'
வித்யாதர் - chennai,இந்தியா
13 பிப்,2013 - 14:12
 வித்யாதர் ஹிந்து மதம், எவ்வளவோ அந்நிய ஆக்கிரமிப்பிலேயும் அழியாது இன்றும் நிலைத்து உள்ளது. இதை கமல் என்கிற ஒரு மனிதனால் அழிக்கவா முடியும்?
பிரசன்னா - madurai ,இந்தியா
13 பிப்,2013 - 12:18
 பிரசன்னா அபூதாபியில இருந்து கணேஷ் எழுதி இருக்கிற அவ்ளோ நீளமான கட்டுரை... வேற ஒரு வார இதழில வந்தது...இப்படி கூட கருத்து சொல்லலாமே....அப்படியே சொன்னாலும் எங்க இருந்து எடுதோம்ன்னு சொல்ல வேணாமா? ஆசிரியர் அவர்களும் இதெல்லாம் கொஞ்சம் கவனிக்கலாமே
RATHINAKUMAR - Thanjavur,இந்தியா
13 பிப்,2013 - 11:16
 RATHINAKUMAR VR is movie made only for commercial reasons with sum smart and racy screenplay with good standards. This is not against any community or religion.
வெங்கடேஷ் - Karur,இந்தியா
13 பிப்,2013 - 11:14
 வெங்கடேஷ் இது தான் சினிமா. கமல் ஜி we are waiting for part II. when u release sir. we know u not mind such a stupid comments. this is the movie of tamil cinema. simply said for stupid audiences this movie only for genius not for fool.
tamilan - tamilnadu,இந்தியா
13 பிப்,2013 - 10:32
 tamilan படம் சூப்பரா இருக்கு இருந்தாலும் கிளைமாக்ஸ் கொஞ்சம் தெளிவா சொல்லியிருக்கலாம். படிக்காதவங்களுக்கு புரியறது கொஞ்சம் கஷ்டம். ஓவர் ஆல் சௌண்ட்ஸ் அண்ட் ஸ்க்ரீன் ப்ளே fight எல்லாமே super . u r கிரேட் கமல்.
கமல் ரசிகன் - Thiruvennai nallur,கத்தார்
13 பிப்,2013 - 09:48
 கமல் ரசிகன் இரண்டு முறை பார்த்தால் தான் புரியும், அதேபோல் பார்க்கும் அளவிற்கு வேகமாக உள்ளது...
கண்ணன் - thoothukudi,இந்தியா
13 பிப்,2013 - 01:45
 கண்ணன் ஆங்கில படத்திற்கு நிகராக என்று சொல்லி தரம் குறைக்க வேண்டாம். கமலின் 55 ஆண்டு சினிமா வாழ்க்கையில் மைல் கல்லான இந்த படம் உலக தராம் வாய்ந்தது. கவர்ச்சி இல்லாது, ஆபாச ரெட்டை அர்த்த வசனம் இல்லாத ஒரு ஆக்ட்சன் மற்றும் திர்ல்லெர் சினிமா. கதையிலும் சரி, வசனம் மற்றும் கட்சி படுத்திய விதமும் மிக நேர்த்தியாக செய்துள்ளார். பல கேரக்டர்கள் பல மொழிகள் பேசுவது தவிர்த்து தமிழ் மொழியிலே டப்பிங் செய்திருந்தால் எல்லா தரப்பினரையும் சென்றடையும். பல ஆங்கில படங்கள் நன்றாக ஓடுவதற்கு தமிழில் டப் செய்ய படுவதும் ஒரு காரணம். கமல் 2 வது பாகத்திலாவது இதை முயிற்சி செய்தல் வசூலில் எடுக்கும் விஸ்வரூபம்.....
sam - chennai,இந்தியா
13 பிப்,2013 - 00:51
 sam i have some doubt.. lot of why 1.what is the assignment kamalakasan accepted from India.. 2.why he went to Afghanistan.. 3.what is the basic trouble between Omar and kamal 4.why kamal want to kill omar 5.afganistan and india not a enemy country.than why kamal being against afgan.. 6.how kamal got American citizen visa.. 7.what is the relation between india and america..it is possible america can accepted indian officer as a citizen... the story is not clear....kamal try to make good film..but he never did it...
ajith - trunelveli,இந்தியா
13 பிப்,2013 - 00:40
 ajith சூப்பர்
payithiyam - chennai,இந்தியா
12 பிப்,2013 - 23:27
 payithiyam படம் ரொம்ப நல்ல இருந்தது
santhoshjay - salem,இந்தியா
12 பிப்,2013 - 21:20
 santhoshjay its very superb film.indha badam vishwaroobathin vishvaroobm. i love kamal
vimal - salem,இந்தியா
12 பிப்,2013 - 18:47
 vimal supper kamal sir...
சரவணன்.ர - tamilnadu,இந்தியா
12 பிப்,2013 - 18:35
 சரவணன்.ர interesing and super
prabhakaran - kangayam,இந்தியா
12 பிப்,2013 - 18:23
 prabhakaran படம் சூப்பர் ஆனா மொழி சரியாய் புரியல பார்ட் 2 ரொம்ப எதிர் பாக்கறேன்
ரஞ்சித் kumar - Chennai naduveerapattu,இந்தியா
12 பிப்,2013 - 16:40
 ரஞ்சித் kumar தல சிங்கம் யா நீ. இம் மொழி நாடின் உண்மை புலவன் நீ . வெறும் நாயகன் அல்ல நீ உலகத்திற்கு நாயகன் .
virumandi - trichy,இந்தியா
12 பிப்,2013 - 15:49
 virumandi iஇன்னும் கொஞ்சம் தெளிவா எடுத்திருக்கலாம் . வெற்றி விழா படம் மாதிரி இரண்டாவது முறை பார்த்த தான் புரியும் .
Sneka - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
12 பிப்,2013 - 15:02
 Sneka நீங்க எப்ப அடுத்த படம் ரிலீஸ் பண்ணுவீங்க?
ahar - Qatar,இந்தியா
12 பிப்,2013 - 14:55
 ahar aaskar avaardirkaha கமல் எடுத்திருக்கும் கீழ்த்தரமான முற்சி.
indian - dubai,இந்தியா
12 பிப்,2013 - 14:24
 indian இஸ்லாமிய நண்பர்களே ! கமலின் இந்த படத்திற்கு இவ்ளோ போராட்டம் பண்றிங்களே, அஜ்மல் கசாப் போன்ற தீவிரவாதிகள் உங்கள் நாட்டை தாக்கிய பொது என்ன செய்து கொண்டு இருந்திர்கள் ? ஒரு இந்திய முஸ்லிம் நாட்டிற்காக போராட கூடாதா?
அருண் - virudhunagar,இந்தியா
12 பிப்,2013 - 14:05
 அருண் ஹல்லோ அன்சாரி சார் கமல் முஸ்லிம்களுக்கு விரோதி அல்ல ,ஆப்க்கன் முஸ்லிம் தீவிரவாதிக்கு மட்டும் தான் விரோதி ,ஆனா உன்ன மாதிரி ஆளுங்க நம்ம நாட்டுக்கே விரோதி தான் .
ravi - chennai,இந்தியா
12 பிப்,2013 - 12:44
 ravi கமல் இத்தனை படம் எடுத்தும் நடித்தும் வசனம் பேசுவதிலும் எழுதுவதிலும் ஏன் பக்குவம் வரவில்லை? இந்த ப்ளாக் அவரை திருத்த போவதில்லை... என்றாலும் என்னை போன்ற அவர் ரசிகர்கல் அவரை கேவலமாக எடை போடும் நிலை வரும் நாள் ரொம்ப தூரத்தில் இல்லை.. சினிமா மேடம் ஜாதிக்கு அப்பாற்பட்டது என்பதை கமல் போன்ற படிக்காத ஆனால் மண்டை கணம் நிறைந்த நடிகர்கல்லுக்கு யார் புரிய வைப்பார்கள்?
ப்ரியதர்ஷன் - chennai,இந்தியா
12 பிப்,2013 - 12:05
 ப்ரியதர்ஷன் இங்கே ஒரு நண்பர் குறிபிட்டுருந்தார் அமெரிக்க ஆப்கனை தொல்லை கொடுத்ததை படத்தில் சொல்லவில்லையென்று. ஒரு கட்சியில் ஆப்கன் பெண்மணி தீவிரவாதியை பார்த்து 'முதலில் இங்க்ளிஷ்காரன் வந்தான், அப்புறம் ரஷ்யாகாரன் அப்புறம் அமெரிக்காகாரன் இப்போ நீங்க' என்று கூறுவார். இதற்கு மேலும் வேறென்ன வேண்டும்? இது இந்த தீவிரவாதிய பற்றிய படம் என்பதால் அதை பற்றிதான் எடுக்க முடியும். இருந்தாலும் அங்கங்கே பஞ்ச்
வின்சென்ட் - Trichy,இந்தியா
12 பிப்,2013 - 12:05
 வின்சென்ட் வேண்டும் என்றால் பாரத புத்திரனிடம் எப்படி உலக தரகதுகு படம் எடுக்கனும்னு கெஅட்டு கொள்ளலாம் அவர் அவதார் எடுத்த சம்ஸ் கமேரோன் ஒன்னு விட்ட மசான்ல
பிரதீஷ் - bangalore,இந்தியா
12 பிப்,2013 - 10:54
 பிரதீஷ் its a new trendsetter ...... for tamil cinema
கெட்ட தம்பி - chennai,இந்தியா
12 பிப்,2013 - 09:43
 கெட்ட தம்பி டேய் , நாரவாய் நல்ல தம்பி , உனக்கு என்னட தெரியும் விஜய் ரசிகர்கள பத்தி, நி எழுதுன காமண்டுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் என்னடா லிங்க்?
செந்தில்குமார் - coimbatore,இந்தியா
11 பிப்,2013 - 20:13
 செந்தில்குமார் dinamalar sonnaa சரிதான்
TK.vijay - CHENGAM,இந்தியா
11 பிப்,2013 - 20:02
 TK.vijay சூப்பர்.. டப்பர்...நன்று...குட் கதையை koanjam velaki erukalam
samuel - thiiruninravur,இந்தியா
11 பிப்,2013 - 19:20
 samuel நல்ல padam,kuttram சொல்றவன் ஆயிரம் சொல்லுவான்.நல்ல படம் எடுத்து runkeenga . அறிவு இல்லாத முட்டல் தான குற்றம் சொல்லுவாங்க
kumar - chennai,இந்தியா
11 பிப்,2013 - 18:44
 kumar super
ராஜ்குமார் - cuddalore,இந்தியா
11 பிப்,2013 - 18:36
 ராஜ்குமார் இந்த படதை குற்றம் சொல்ல்பவன் ஒரு முட்டாள்
sudharsan - sivakasi,இந்தியா
11 பிப்,2013 - 18:31
 sudharsan we r wating for VISVAROOBAM part 2 ..........................hats off 2 u sir
ஈரோடு santhanam - namakkal,இந்தியா
11 பிப்,2013 - 18:26
 ஈரோடு santhanam மிக நல்ல படம்...... நல் வாழ்த்துக்கள் கமல் சார்.........
கே.PRAKASH - TIRUPUR,இந்தியா
11 பிப்,2013 - 17:30
 கே.PRAKASH SUPER FILM I AM SAW A FILM ON SATURDAY - SUPER CONGRATULATION ON PART II
murugan - Boissy- saint- leger,பிரான்ஸ்
11 பிப்,2013 - 15:58
murugan சில உலகமொழி படங்களை பார்ப்பவர்கள் மட்டும் இந்த படத்திற்கு கருத்து சொல்லவும்.ஒரு தமிழனால் உலகத்தரத்திற்கு ஏற்ப தரப்பட்ட அற்புதமான படம் என்று, தமிழனாகிய நாம் அனைவரும் பெருமைபடவேண்டும்.
Unnai pol Oruvan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
11 பிப்,2013 - 15:56
 Unnai pol Oruvan விஸ்வருபம் காண துபாயில் காத்திருக்கிறேன், இங்கே தடையாம், நம்பிக்கையோடு காத்திருக்கிறேன். :(
நல்ல தம்பி - ambur,இந்தியா
11 பிப்,2013 - 13:14
 நல்ல தம்பி சுப்பர் படம் . கண்டிப்பா விஜய் ரசிகர்களுக்கு (ஊருக்கு 4 பேர் )இந்த படம் பிடிக்காது.
கே.ஜெயராமன் - Coimbatore,இந்தியா
11 பிப்,2013 - 13:01
 கே.ஜெயராமன் படம் ஓகே .படம் வெளிய வர ஏன் இத்த தேவைலிஇலாத தடைகள்.அப்படி ஒன்றும் இல்லை
syed ismail - chennai,இந்தியா
11 பிப்,2013 - 12:57
 syed ismail படம் ஹாலிவுட் தரத்தில் இருப்பது உண்மை தான், கமல் அவர்களே படத்தில் ஆப்கான் அமெரிக்கர்களை துன்புறுத்துவது போன்று காட்டுல்லிர்கள் அமெரிக்க ஆப்கான்நை பண்ணியா கொடுமைகள் எதையுமே காட்ட மறந்தது ஏன்? ஆஸ்கார் கொடுபவர்கள் அமெரிக்கர்கள் என்று தான? முஸ்லிம்களின் வரலாறுகளை தெரிந்து புரிந்த நீங்களே இப்டி சித்தரிப்பது ஞாயமா ? உங்கள் ரசிகனாக இருந்ததற்கு வெட்க படுகிறேன்.
venkat - chennai.,இந்தியா
11 பிப்,2013 - 10:41
 venkat யப்பா புத்திர அவர்களே உலகம் அனைதையும சுற்றி பார்த்தவர் நீங்களே சொன்ன சரி தா.
Akash - Bangalore,இந்தியா
11 பிப்,2013 - 09:49
 Akash For Rajni sir Batsha Movie, For Kamal sir Vishwaroopam Movie..Excellent Movie, This excellent word is not suitable to that movie..I saw twice this movie. This is the first Kamal movie which i saw two times in theatre in my life till now. Want to watch one more time too
L கணேஷ் - Chicago,யூ.எஸ்.ஏ
11 பிப்,2013 - 02:38
 L கணேஷ் படம் தமிழ்நாட்டில் வெளிவராத போது - நான் பலமுறை வீழ்ந்தேன் பின் எழுந்தேன் என்று சுயசரிதம் பாடினார். இப்போது மறுபடியும் விழுவதை ஏன் இவ்வளுவு பெரிதாக்கினார்? 95 கோடி ரூபாய் என்பதலா? மத சார்பற்ற மாநிலம் இந்தியாவில் உள்ளதா? எந்த மத சார்பற்ற நாடு உள்ளது இந்த பத்மஸ்ரீ உலக நாயகனை ஏற்றுக்கொள்ள? எந்த மதத்தினரையும் புண்படுத்தவில்லை என்றார். பார்ப்பனர்களை எள்ளி நகையாடுவதால் இந்துக்களை புண் படுத்துவதாகதா? ஏன் 'அயீஷா கொஞ்சம் bacon சாப்ப்ட்டுபாரேன்' என்று வசனம் எழுதி இருக்கலாமே? பயம் தானே? தனக்கிருக்கும் சொந்த வெறுப்பை உண்மைப்படுத்துவது சரியாகாது. இன்றும் ஒரு பாப்பாத்தியின் கருணையால் தான் படம் வெளிவந்திருக்கிறது. மொத்தத்தில் ஏதோ Documentary பார்த்த அனுபவம் கிடைக்கிறது. வயோதிகத்தில் வாலிப முயற்சி செய்திருக்கிறார். வெளிநாட்டு இருப்பதின் அரவணைப்பில் Hollywood கனவை உண்மையாக்க முயற்சி செய்கிறாரோ?
venkatesh - dammam,சவுதி அரேபியா
10 பிப்,2013 - 22:44
 venkatesh குடும்ப படத்தில் நீண்ட வசனம் பேசி கண்ணீர் விடுவது,நூறு பேர் சேர்ந்து குருப் டான்ஸ் ஆடுவது,தனியாக காமெடி ட்ராக் போன்ற கற்பனைகளோட கமல் படத்துக்கு போனா போராதான் இருக்கும்.அப்புறம் இந்த படத்தை உலகத்தரம் உள்ள ஒரு படம் என்பதை மறுப்பவர்கள் இந்தப்படத்தை அர்னால்ட் படங்களோடு ஒப்பிட்டு பார்கிறார்கள்.இதுதான் உச்சம் என்று சொல்லவில்லை.சர்வதேச தரத்தின் வரிசையில் இந்தப்படம் உள்ளது. கமலினால் தமிழ் சினிமா பெருமை அடைகிறது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை
சிவா - sharjah,ஐக்கிய அரபு நாடுகள்
10 பிப்,2013 - 21:32
 சிவா ஒரு தமிழன் உலக தரத்திற்கு தன் உயிரை வைத்து படம் எடுத்துள்ளதை பாராட்டாமல் விமர்சனம் செய்வது தடை செய்வது வெட்கமான விஷயம் மனிதர்களாக நடந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்
Sathiya - Madurai,இந்தியா
10 பிப்,2013 - 20:41
 Sathiya நான் கமல் ரசிகன் இல்லை. அதிக அளவு ரஜினி, விஜய், விக்ரம், சூர்யா, அஜித் படங்கள் பார்ப்பவன். ஆப்கானிஸ்தானின் படிப்பறிவு மற்றும் அவர்களது அறியாமையை ரொம்ப அழகாக அழுத்தமாக காட்டியுள்ளார். இது தமிழர்களுக்கான படம் மட்டும் இல்லை. அவர் உலக தரத்துக்கு போக வேண்டுமென்றால், இது போல தன எடுத்தாக வேண்டும்.
prem - coimbatore,இந்தியா
10 பிப்,2013 - 19:24
 prem விஸ்வரூபம் ஒரு நல்ல படம்,எ இதுக்கு தடை போட்டகுனு தெரியல அப்படி தடை விதுசுருத பிரஸ்ட் கடல் படதுகுத்கு விதுசுருக வேடும் ...இதுல யாரையும் எத மதத்தையும் குரிபுடுல ...கமல் இச் எ கிரேட் அக்டோர் டான்சர்
Sneka - Chennai,இந்தியா
10 பிப்,2013 - 19:23
 Sneka நாங்கள் எதிபார்த்த அளவு இல்லை . வருந்துகிறோம்
Nathan - Singapore,சிங்கப்பூர்
10 பிப்,2013 - 18:39
 Nathan கமல்ன்கிற கலைங்கனுக்காக- பல வருடங்களுக்கு பிறகு திரையரங்கு சென்று படம் பார்த்தேன்.....மனிதர்களை, மனித உணர்வுகளை நேசிக்ககூடியா ஒவொருவரும் பார்க்க வேண்டிய படம் -
seran - kollidam,இந்தியா
10 பிப்,2013 - 18:22
 seran படம் அருமை கமலால் தமிழ் திரை உலகுக்கு பெருமை
KARUNANITHY KP KODUMUDI - ERODE,இந்தியா
10 பிப்,2013 - 17:31
 KARUNANITHY KP KODUMUDI விஷயம் உள்ளவரின் விஸ்வரூபம் வீணாய் போகாது...தடைகளைத் தகர்த்து தொடரும்!
karthick - singapore,இந்தியா
10 பிப்,2013 - 15:05
 karthick படம் ரெம்ப நல்லாஇருக்கு கமல் இச் கிரேட்
ganeshan - palani,இந்தியா
10 பிப்,2013 - 13:08
 ganeshan அறிவாளிகள் மட்டும் பார்க்க வேண்டிய படம் .
- AUH,இந்தியா
10 பிப்,2013 - 11:22
 ச கமல் என்கிற கோழி கூவி பொழுது விடியாது மறையாது .. வி ஹிந்துஸ் டோன்ட் கேர்...
BALA - theni,இந்தியா
10 பிப்,2013 - 10:24
 BALA அவர் யார் என்பது படத்தை பார்த்தால் தெரியும் கமல் சார் கமல் சார் தான்
க பிரகாஷ் - Nashik,இந்தியா
10 பிப்,2013 - 10:19
 க பிரகாஷ் I just want to say only one thing that I have been a fan of Kamal Hassan from the age of 5. But till now by far best the worst movie is his latest flick is "VISWAROOPAM". B'coz u would not understand the story. Pls Kamal do not direct picture of this sort. Instead direct a film which reaches the common public very easily else his so cal;led VISWAROOPAM-2 will be an utter flop. JAI HIND
rajagopal - coimbatore,இந்தியா
10 பிப்,2013 - 10:10
 rajagopal கமல் சார் இது போல் தான் படம் எடுக்க வேண்டும்....கமல் கமல் தான்..
ராஜேஷ் - Chennai,இந்தியா
10 பிப்,2013 - 10:03
 ராஜேஷ் மொக்க பிலிம். கமல்கு என்ன ஆச்சுனு தெரியல.. அந்த படத்தில் சொன்னது எல்லாம் பொய். எதுமே உண்மை இல்ல...
பாரத புத்திரன் - Chennai,இந்தியா
10 பிப்,2013 - 08:15
 பாரத புத்திரன் உக்கார முடியலே, இந்தப் படத்தை பார்த்து விட்டு உலகத்தரம் அது இது என்று இங்கு கும்மிடிப் பூண்டி தாண்டிப் எதையும் பார்த்திராத ரசிகர்கள் ரீல் விடுகிறார்கள். படத்தையும் விட கொடுமை இரண்டாம் பாகம் வெளியிடப் போவதாக வந்திருக்கும் அறிவிப்பு! வீரமணி குழுவினருக்கு வேண்டுமானால் இந்தப் படம் பிடித்திருக்கலாம்!
சரவணன் - rak,ஐக்கிய அரபு நாடுகள்
10 பிப்,2013 - 08:11
 சரவணன் கமல் சார் வெரி குட் பிலிம் சார்
senthil - chennai,இந்தியா
10 பிப்,2013 - 07:53
 senthil What எ பிலிம்.....எல்லோரும் கன்டிப்பாக தியேட்டரில் பார்க்க வேண்டிய படம் . இந்திய சினிமாக்களில் இதுவரை யாரும் எடுத்திராத, பார்த்திராத படம் . கமல் ரசிகனா பெருமைபடுகிறேன் .கமலுக்கு நன்றி .
dhanasekar - tirupur,இந்தியா
10 பிப்,2013 - 07:14
 dhanasekar விஸ்வரூபம் விஸ்வரூபம் தான்............
babu - doha,கத்தார்
10 பிப்,2013 - 02:49
 babu Its a super movie.why people are criticizing in negative way.you should understand one thing,this movie is produced in Hollywood touch,but this is not a Hollywood movie.enjoy the performance of kamal.think more before criticizing.pls mention ur original name,be courageous my brothers.hatsoff to kamal
thilak - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
10 பிப்,2013 - 00:30
 thilak this is not tamil film, its world film first i want to say to him, mr.kamal this time u wil get oscar no doubt,and for viewers plz dont give wrong comments if you not understand this kind of movie, u peoples waste, plz go to masala movie, dont waste others ticket u peopels dont have knowledge that s y you re not undrstand this kind of film, mr.kamal dont worry about this kind audiences u have 1000000000000000 good comments keep it up dont think this foolssss
பாலா ஸ்ரீனிவாசன் - Singapore,சிங்கப்பூர்
09 பிப்,2013 - 14:14
 பாலா ஸ்ரீனிவாசன் அதி மேதாவி என்ற நினைப்பில் தனது எண்ணக் குமட்டலில் கமல் எடுத்த வாந்திதான் விஸ்வரூபம்! குப்பை!!
krish - lub,காங்கோ
09 பிப்,2013 - 14:13
 krish பார்பனர்களை நக்கல் செய்து அவர் பேசும் டயலாக் வன்மையாக கண்டிக்க படவேண்டிய ஒன்று.
rajkumar - rameswaram,இந்தியா
09 பிப்,2013 - 14:02
 rajkumar Excellent movie.....kamal ...only can do like this movie....vishwaroopam rocks.. all over the world...
munis - madurai,இந்தியா
09 பிப்,2013 - 14:01
 munis world star in VISHWAROOPAM PART II ,i am waiting by Kamal fan's
albert - BAHRAIN,இந்தியா
09 பிப்,2013 - 13:01
 albert குட் பிலிம் by kamalhassan
velmurugan - chennai,இந்தியா
09 பிப்,2013 - 12:38
 velmurugan குட் movie
சூப்பர் கிங்க்ஸ் - Madurai,இந்தியா
09 பிப்,2013 - 12:10
 சூப்பர் கிங்க்ஸ் குறைகளை மட்டுமே பார்க்கும் மனிதர்கள் நிறைந்த உலகம் படங்கள் மட்டும் என்ன விதிவிலக்கா? கமல் படம் சூப்பர்
ஞானவேல்.d - coimpatore,இந்தியா
09 பிப்,2013 - 11:50
 ஞானவேல்.d கமல் என்னைக்கும் கமல்தான் கமல் சினிமாவை உயர கொண்டு செல்பவர்
BHARATHI - TIRUPUR,இந்தியா
09 பிப்,2013 - 10:37
 BHARATHI கமல் மட்டுதான் இந்த உலக தரம் வாய்ந்த படங்களை எடுக்க முடியம். இஸ் ரியல் ஹீரோ.
suresh - tirupur,இந்தியா
09 பிப்,2013 - 10:16
 suresh படம் அறிவிலிகளுக்கு அல்ல அறிவாளிகளுக்கு மட்டுமே
tamilwasim - coimbatore,இந்தியா
09 பிப்,2013 - 10:09
 tamilwasim எதிர்ப்பதற்கு ஒன்றுமில்லை இப்படத்தில். எதார்த்தத்தை படம் பிடித்தாலே பற்றி எரிகிறது நம்மவர்களுக்கு. உலக நாயகனின் சீரிய இப்பணி இனியும் தொடரட்டும் பல்லாண்டுகள்.
selvam - DAMMAM KSA,இந்தியா
09 பிப்,2013 - 10:01
 selvam கமல் ஒரு இந்தியர் என்று இந்தியாவே பெருமை பட வேண்டும் .....GOOD MOVIE. HATS OFF "OUR WORLD HERO KAMAL SIR"
சரவணன் - pattukkottai manjavayal,இந்தியா
09 பிப்,2013 - 09:01
 சரவணன் Movie super. . .கமல் கமல் தான்...
வடுவூறான் - chennai,இந்தியா
09 பிப்,2013 - 08:05
 வடுவூறான் இந்தப்படத்தை இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் எதிர்த்ததைவிட இந்துக்கள் தான் எதிர்த்திருக்க வேண்டும்... என சொல்லாமல் சொல்லும் சில காட்சிகளை விஸ்வரூபத்தில் கமல் வழிய திணித்திருப்பதும், அதை., இந்துக்கள் எதிர்க்காததும் ஏன் என்பது புரியாத புதிர்...!! -இது மட்டும்தான் விமரிசனத்தின் சிறப்பு அம்சம்
selva - singapore,சிங்கப்பூர்
09 பிப்,2013 - 07:34
 selva கிணற்றுத் தவளைகளே......வெளியே வந்து...பாருங்கள், கோவணம் காட்டி,தொப்பையைக் காட்டி...பிச்சைஎடுக்கும்....பிள்ளையைக் காட்டி ........... இந்தியர்களின்....மானத்ததை வாங்கும்...மற்ற படங்களைவிட..இது மட்டமகா போய்விட்டதா ?மாற்று இனத்தவர்கள்..நம் படத்தைப் பார்த்து..கேவலமாக பேசும் போது வலிக்கும் பாரு...போங்கடா நீங்களும்..உங்க ரசனையும்...வீட்டையும்..நாட்டையும்..விட்டு வெளியே வந்து பார்.....உலகம் வேறாகத் தெரியும்...!
ramesh - tharangambadi,இந்தியா
09 பிப்,2013 - 07:15
 ramesh i'll ask one question for mr. sanjeevraj.... why india people go to work for other country... because need forgin money... but indian make other country story don't like... other country money only like.... you will can see english film but india make the world story can't see..... sanjeevraj are you indian.... you know hinidi..... i'm don't understand hinidi... hinidi is your mother language you know.... tamil and hinidi not enemy... why don't study for hinidi in the tamilnadu.......
NADANAM - TIRUPUR,இந்தியா
09 பிப்,2013 - 05:21
 NADANAM விஸ்வரூபம் உண்மையிலையே தமிழ் சினிமாவின் விஸ்வரூபம்தான். தன்னால் ஒருத்தன் மட்டும்தான் தமிழ் சினிமாவில் விஸ்வரூபம் எடுக்க முடியும் என்று நிருபித்திருக்கிறார்.
savithri - coimbatore,இந்தியா
09 பிப்,2013 - 02:05
 savithri படம் சுமார், வசனம் ஒன்றும் புரியலை. இங்கிலீஷ் படம் மாதிரி இருக்கு. baratham சாங் அண்ட் டான்ஸ் சூப்பர். சண்டை சூப்பர்.
வெங்கட் - Chennai,இந்தியா
09 பிப்,2013 - 01:47
 வெங்கட் இந்த படம் புரியணும்னா கொஞ்சம் உலக அறிவும் வேணும், அது இங்க சிலருக்கு தெரியலன்னு நல்லாவே தெரியுது... ஒரு நல்ல படம்... இங்க ஒரு ஆளு 7-8 கேள்வி கேட்டு இருக்கார். அதுக்கு தான் கமல் ending பதில் குடுதுருக்கரே VISWAROOPAM பார்ட் 2 nu வெயிட் பண்ணுக அவசரத்துல பொறந்தவரே... 100% அறிவ use பண்ண தெரிஞ்சவங்க பாக்க வேண்டிய படம். Excellent Movie ... Hats off Kamalhassan ...
கிருஷ் - Prague,செக் குடியரசு
08 பிப்,2013 - 23:47
 கிருஷ் பார்பனர்களை நக்கல் செய்து அவர் பேசும் டயலாக் வன்மையாக கண்டிக்க படவேண்டிய ஒன்று.
ராஜ் தீபக் - Madurai,இந்தியா
08 பிப்,2013 - 23:20
 ராஜ் தீபக் no one can do like KAMAL sir in this film , it will be steps for tamil film equal to hollywood film
m s maniariya - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
08 பிப்,2013 - 21:26
 m s maniariya kamalsir உங்கள் கடின உழைப்புக்கு விஸ்வரூபம் மிக பெரிய விற்றிபடைக்கும்
durai - namakkal,இந்தியா
08 பிப்,2013 - 20:41
 durai super film இன் திஸ் year
Raj - Chennai,இந்தியா
08 பிப்,2013 - 20:31
 Raj Looks like the review is bought by rajkamal productions to give a below par movie rating 4. If it is spy thriller then it should keep u in edge of the seat till the end. This movie wants u to leave at the middle of the movie with unnecessary stuff in Afghanistan. Second it has confused screen play , going back and forth from US to Afghanistan to justify what? Lot folks saying its Hollywood standards... This the joke.. When u see flight and helicopters then does it become Hollywood standards?? For first half hour when dancer Kamal reveals new avatar the film was intact then the movie lost the pace and screenplay. Showing the FBI agents like jokers as if they don't know anything looks like a joke... Have seen some master piece from Mr.Kamal before like Kuruthipunal , Nayakan,etc. but this movie not even close and doesn't live up to hype it created. May be good for hard Kamal fans but not for others... Particularly not for children..
மொக்கையன் - chennai,இந்தியா
08 பிப்,2013 - 20:08
 மொக்கையன் உலக தரம் உலக தரம் ... என்னது அது உலக தரம் ! படம் பார்த்தேன் .. ரொம்ப ரொம்ப சுமார்.... கமல் யாருன்னு கடைசி வரைக்கும் எனக்கு தெரியல ... ஆப்கான் தீவிரவாதிக்கு ட்ரைனிங் கொடுக்குறாரு ... டைரக்ட்ஆ .. பிரதமர் கிட்ட பேசுறாரு ... யாருன்னே தெரியாத மாதிரி அமெரிக்காவுல கதக் ஆடுறாரு .... பூஜா குமார் ஆபீஸ்ல மைக் மச்சி ஒட்டு கேக்கறாரு ... சும்மா பூ .... Saving Private Ryan பாருங்க .. உலக தரம்னா என்னனு புரியும் !!!!
ramakrishna - chennai,இந்தியா
08 பிப்,2013 - 20:08
 ramakrishna படம் சூப்பர். கமல் கமல் தான். இரண்டாம் பாகம் நிச்சயம்
LINGESH - CHENNAI,இந்தியா
08 பிப்,2013 - 19:45
 LINGESH THIS MOVIE IS KAMALHASSAN'S MASTERPIECE.... NO DOUBT..WORLD CLASS CINEMATOGRAPHY AND THE ACTING SKILLS OF KAMAL SIR... VISHWAROOPAM WILL BECOME A RUNWAY HIT.. BUT WHAT I FEAR IS KAMAL MIGHT BE TARGETED AGAIN BY THE SAME GROUP OF PEOPLE INHIS FUTURE.... இதுவரை எந்த ஒரு தமிழ் அல்லது இந்திய திரைபடத்தில் இஸ்லாமியர்களை இவ்வளவு தத்ரூபமாக காட்டியது இல்லை ....எனது பிரார்த்தனை என்னவென்றால் இந்த விஸ்வரூபம் படம் நன்றாக ஓடி கமலுக்கு லாபம் சம்பாதித்து கொடுப்பதை விட அவருக்கு தனது மறைமுக எதிரி களால் எதிகாலத்தில் அவருக்கு எந்த வித கெடுதலும் வரக்கூடாது என்பதுதான்... (படம் வெளியாகும் முன்பு போராட்டம் செய்தவர்களையும் சேர்த்துதான் ..)
karthikeyan - Chennai,இந்தியா
08 பிப்,2013 - 19:43
 karthikeyan சூப்பர் பிலிம் .. டோன்ட் மிஸ் இட் ..
சலீம் - sirkali,இந்தியா
08 பிப்,2013 - 18:26
 சலீம் இந்த படத்தில் கமல் ஹீரோவா அல்லது வில்லனா?
சுரேஷ் - dubai,இந்தியா
08 பிப்,2013 - 18:01
 சுரேஷ் dr கமல் சார், வார்த்தையே இல்லை நோ வோர்ட் டு சே.. யு ஆர் deseved ,vallthukal
ansari - malaysia,இந்தியா
08 பிப்,2013 - 18:00
 ansari கமல் ஒரு நல்ல நடிகர், முஸ்லிம்களுக்கு விரோதி.
siva - bangalore,இந்தியா
08 பிப்,2013 - 17:31
 siva padam parava illa., konjam bore..
கிருஷ்ண - coimbatore.,இந்தியா
08 பிப்,2013 - 17:27
 கிருஷ்ண ஹாலிவுட் இயக்குனர்களை மிஞ்சிவிட்டார்... கமல் சார் ...
mahi - trivandrum,இந்தியா
08 பிப்,2013 - 16:00
 mahi nice movie , thanks for directing such a movie , யார் என்று தெரிகிறதா பாடல் சூப்பர்,such a great introduction
roy - singapore,சிங்கப்பூர்
08 பிப்,2013 - 15:29
 roy kamal is a good actor.but a bad story teller.just like in real live very valla valla kola kola.
சிவா - delhi,இந்தியா
08 பிப்,2013 - 14:44
 சிவா விஸ்வரூபம் படம் இந்திய சினிமாவுக்கு ஒரு எடுத்துகாட்டு என்றால் மிகையாகாது. கமல் மீண்டும் தான் ஒரு உலக நாயகன் என்பதை உறுதி செய்துள்ளார் என்பது மட்டும் உறுதி. படத்தின் கதை மற்றும் உட்கருவை தெரியாமலே தங்களின் சுயநலத்திற்காக தேவையற்ற பிரசினைகளை உண்டாகி உள்ளனர் என்பது தெளிவாக தெரிகிறது. தயவு செய்து சினிமாவை பொழுதுபோக்கு அம்சமாக பாருங்கள் அப்போது ஒன்றும் தோனது .. இந்தியாவை மதசார்பற்ற நடக்க மாற்ற உறுதுணையாக நில்லுங்கள் .
பாஸ்கரன் - chennai,இந்தியா
08 பிப்,2013 - 14:41
 பாஸ்கரன் கமல்ஹாசன் மட்டும் தான் தமிழ் சினிமாவை உலக தரத்துக்கு கொண்டு செல்ல முடியும். இங்கு சிலர் விமர்சனம் என்ற பெயரில் அவர்கள் யார் ரசிகர்கள் என்பதை சொல்லி இருகின்றனர் அவர்களை யார் கதை உள்ள இந்த படத்திற்கெல்லாம் போக சொன்னது, குத்து பாட்டு, மற்றும் கானா பாடல்கள் உள்ள படத்திற்கு மட்டும் போக சொல்லுங்கள், எப்போபோழுதான் இவர்கள் திருந்துவார்களோ .............
மனிதன் - சென்னை ,இந்தியா
08 பிப்,2013 - 14:26
 மனிதன் எவ்ளோ நல்லா படம் எடுத்தாலும் உங்களையெல்லாம் திருப்தி படுத்தவே முடியாது
srilakshmi - madurai,இந்தியா
08 பிப்,2013 - 14:22
 srilakshmi சூப்பர் குட் பிலிம் வாழ்த்துகள்
priyakutty - chennai,இந்தியா
08 பிப்,2013 - 13:19
 priyakutty படம் பாத்துட்டு வந்து முழுசா 24 மணி நேரம் ஆச்சு, இன்னமும் ரெண்டு காதுக்கு உள்ளேயும் குண்டு வெடிக்கிற சத்தம் கேட்டுக் கிட்டே இருக்கு, கமல் சார் "தொழுகை" பன்னிக்கிறேன்னு சொல்லிட்டு போடுற சண்டை நிச்சயம்மா தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத ஒரு ஆங்கில படத்துக்கு இணையான சண்டைக் காட்சி. {25 வருசதுக்கு முன்பாகவே "விக்ரம்" படத்துல கமல் பண்ணுன "கிளைமாக்ஸ்" தான் இன்னிக்கு "ஜாக்கி ஜான்" CZ12 படத்துல பண்ணி இருக்கார். அன்று முதல் இன்று வரைக்கும் எப்போவும்மே "கமல் சார்" மட்டும் தான் "உலக நாயகன்"
டிங் டாங் - thiruchy,இந்தியா
08 பிப்,2013 - 13:13
 டிங் டாங் நாலு பாட்டு, அதில் ரெண்டு குத்து பாட்டு, நாலு சண்டை, மொக்க சிரிப்பு, ஒண்ணுக்கும் ஒதவாத செண்டிமெண்ட் இதையெல்லாம் எதிர்பார்த்து படம் பார்கிறவங்க தயவு செய்து இங்க கருதேழுறேன் பேர்வழி என்று கழுதருக்காதீர்கள்
ஆர்ட்கிங் - bangalore,இந்தியா
08 பிப்,2013 - 12:28
 ஆர்ட்கிங் நண்பர்களே! ஜாதி, மதம், மொழி இவை எல்லாம் விட்டுவிடுங்கள். ஒரு உன்னத கலைஞ்சனின் படைப்பை மட்டும் பாருங்கள். நாம் செல்லும் பாதை செரியெ.. வாழ்க வளமுடன்.
மாதவன் - Tirupur,இந்தியா
08 பிப்,2013 - 12:09
 மாதவன் பிரமாதம்... டயலாக் மட்டும் சரியாக புரியவில்லை...
manibalan - puducherry,இந்தியா
08 பிப்,2013 - 12:08
 manibalan படம் super
Prasad - Coimbatore,இந்தியா
08 பிப்,2013 - 12:06
 Prasad கமல் 100 கோடி போட்டு எடுத்த படத்த நாம 100 ரூபா கொடுத்து பாத்துட்டு ரொம்ப ஓவர்-ஆ கமெண்ட் பண்ண கூடாது.. படம் உண்மையிலே நல்லா இருக்கு...
kumar - thirupur,இந்தியா
08 பிப்,2013 - 11:23
 kumar padam super.mozhi puriyavillai. tamilil vasanam irunthirunthal 100/100
kumar - tirupur,இந்தியா
08 பிப்,2013 - 11:20
 kumar super , ana ethartham enra peyaril uruthu mattrum aangilam puriyavillai,thamili vasanam irunthaal padam 100 kku 100.
mohan - Singapore,சிங்கப்பூர்
08 பிப்,2013 - 10:52
 mohan உலகத்தரம் வாய்ந்த படம்
ராஜ் குமார் - pollachi,இந்தியா
08 பிப்,2013 - 10:45
 ராஜ் குமார் கமலை அவமதிப்பு செய்த அனைவர்க்கும் இது மாபெரும் பதிலடியை கொடுத்து விட்டது.வாழ்க தலைவா
siva - eroded,இந்தியா
08 பிப்,2013 - 10:44
 siva கமல் ஒரு இந்தியர் என்று இந்தியாவே பெருமை பட வேண்டும் .....
கலைவாணி.M - covai,இந்தியா
08 பிப்,2013 - 10:41
 கலைவாணி.M உலகநாயகனின் வெற்றி பயணம் நிச்சயம் தொடரும்....என்றும் உங்களைய பின் தொடரும் உங்கள் ரசிகை....சிறந்த படத்தை தந்த தங்களுக்கு நன்றி....சோதனைகளை வென்று சாதனை படைத்தார்.....
satheesh - chennai,இந்தியா
08 பிப்,2013 - 10:01
 satheesh முட்டாள் ராஜ் இந்த படத்துக்கு என்னடா குறை படம் சூப்பர்
ghilli - coimbatore,இந்தியா
08 பிப்,2013 - 10:01
 ghilli சுவாரசியம் இல்லாத கதை, திரைகதை மொக்க படம்..இதுல செகண்ட் பார்ட் வேற வருதாம்....என்ன கொடுமை...
sanjeevraj - Madurai,இந்தியா
08 பிப்,2013 - 09:03
 sanjeevraj i have some doubt.. lot of why 1.what is the assignment kamalakasan accepted from India.. 2.why he went to Afghanistan.. 3.what is the basic trouble between Omar and kamal 4.why kamal want to kill omar 5.afganistan and india not a enemy country.than why kamal being against afgan.. 6.how kamal got American citizen visa.. 7.what is the relation between india and america..it is possible america can accepted indian officer as a citizen... the story is not clear....kamal try to make good film..but he never did it...
veeramani - mannargudi,இந்தியா
08 பிப்,2013 - 08:00
 veeramani Movie super. . .
natarajasastry - kancheepuram,இந்தியா
08 பிப்,2013 - 07:32
 natarajasastry ஒரு உன்னத கலைஞன் இனி மேலாவது மற்றவர்கள் உணர்வுகளை காயபடுதாமல் இருந்தால் நல்லது
natarajan - chennai,இந்தியா
08 பிப்,2013 - 06:22
 natarajan நான் வருடம் ஒரு படம்தான் பார்ப்பேன். ஆனால் இந்த மாதிரி படத்தை எத்தனைமுறை வேண்டுமானாலும் பார்க்கலாம். உண்மையிலேயே மிகச்சிறந்த உலகத்தரம் வாய்ந்த தமிழ்படம். hats off to கமல்
kaattupuli - chennai,இந்தியா
08 பிப்,2013 - 04:37
 kaattupuli படம் பாராட்டபடவேண்டியது.
Ravi - Duabi,இந்தியா
08 பிப்,2013 - 03:19
 Ravi I AM WAITING FOR THIS GREAT MOVIE. STILL NOT YET RELEASED IN DUBAI...
jeyaram - paramakudi,இந்தியா
08 பிப்,2013 - 00:21
 jeyaram படம் ஓகே .படம் வெளிய வர ஏன் இத்த தேவைலிஇலாத தடைகள்.அப்படி ஒன்றும் இல்லை
rishi - chennai,இந்தியா
08 பிப்,2013 - 00:16
 rishi படம் ரொம்ப போர் ஏன் இந்த படத்துக்கு போனேன் ஆயிடுது இவர் தமிழ்நாட்டுக்கு படம் எடுத்தாரா அல்லது வெளிநாட்டுக்கு படம் எடுத்தாரா என்று தெரியல?
Muthuvel - Toronto,கனடா
08 பிப்,2013 - 00:12
 Muthuvel மறுபடியும் கமல் ஒரு சிறந்த kalignar என்பதை நிருபித்துள்ளார் அதுவும் இம்முறை உலகளவில்! வாழ்க அவரது கலைத்தொண்டு!
வரதராஜ் - Abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
07 பிப்,2013 - 20:37
 வரதராஜ் மிகவும் அருமையான விமர்சனம்,,, படம் பார்க்க ஆவலை தூண்டியது,,, ஆனால் இங்கே படத்துக்கு தடையாம்!!! என்ன செய்வது,,, வாழ்க கமலின் வெற்றி பயணம்....
Kamal Relative - Bayern ,ஜெர்மனி
07 பிப்,2013 - 19:40
 Kamal Relative wow what a wonderful film...waiting to see Part 2....Hatts off to your acting, story, camera, direction, hardwork and dance...marvelles..awesome....muuuu
karthi - banglore,இந்தியா
07 பிப்,2013 - 19:26
 karthi படம் பிரமாண்டம், உலக தரம். மத்த இந்திய படங்களுக்கு எவ்வளவோ பரவாயில்லை. அந்த ஒரு பரத நாட்டியதுகே national award குடுக்கலாம்.
சிதயுவராஜ் - chennai,இந்தியா
07 பிப்,2013 - 19:23
 சிதயுவராஜ் Fabulous Movie. i watched it 3 times. catch the action in theater.
Nazer - Trichy,இந்தியா
07 பிப்,2013 - 19:20
 Nazer குறுப்பிட்ட சமூகத்தை பற்றி ஏன் படம் எடுக்கணும் , வேற subject இல்லையா ?
R.BHARANITHARAN - salem,இந்தியா
07 பிப்,2013 - 19:13
 R.BHARANITHARAN GOOD MOVIE. HATS OFF "OUR WORLD HERO KAMAL SIR"
கோபிகுழந்தைசாமி - chennai,இந்தியா
07 பிப்,2013 - 19:05
 கோபிகுழந்தைசாமி தடைகளை வென்று சரித்திரம் படைத்திருக்கிறார் எங்கள் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள்.
rathnakumar - Dubai UAE,இந்தியா
07 பிப்,2013 - 18:55
 rathnakumar உலகநாயகன் கமல்னா சும்மாவா ?
jenith - nagercoil,இந்தியா
07 பிப்,2013 - 17:58
 jenith படம் சூப்பர்...................
raju - chennai,இந்தியா
07 பிப்,2013 - 17:48
 raju இந்தமாதிரியான விமர்சனத்தை தினமலரில் எதிர்பார்கவில்லை.எப்படித்தான் இந்த படத்தை ரசித்தீர்களோ தெரியவில்லை உங்களுடைய விமர்சனம் பணத்திற்காக
Madurai - MADURAI,இந்தியா
07 பிப்,2013 - 17:07
Madurai வீழ்ந்தாலும் விதையாகத்தான் வீழ்வேன் என்ற கமலின் வார்த்தைகள் தமிழ் ரசிகனுக்கும் சினிமா உலகதினற்கும் உரக்க சொல்லிவிட்டது விஸ்வரூபம்.....
தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement

டாப் 5 படங்கள்

 • Advertisement

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2015 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in