Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கமலையும், மம்முட்டியும் இணைக்கும் விஸ்வரூபம் எடிட்டர்

01 ஜூலை, 2022 - 15:42 IST
எழுத்தின் அளவு:
Sources-says-Mammootty-to-act-in-Kamal-film

சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இந்த படத்தில் நடித்த விஜய்சேதுபதி, மலையாள நடிகர் பஹத் பாசில் உள்ளிட்டோரும் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது. இந்த படத்தை தொடர்ந்து, அடுத்ததாக இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் கமல் ஒரு படம் நடிக்க இருக்கிறார் என்பது அதிகாரப்பூர்வமாக வெளியான தகவல்.

இந்த மகேஷ் நாராயணன் கமல் நடித்த விஸ்வரூபம் படத்திற்கு எடிட்டராக பணியாற்றியவர். மலையாளத்தில் சீ யூ சூன், மாலிக் ஆகிய படங்களையும் இயக்கியவர். விக்ரம் படம் போல இந்தப் படத்திலும் கமலுக்கு இணையான இன்னொரு முக்கிய கதாபாத்திரம் இருப்பதாகவும் அந்த கதாபாத்திரத்தில் மம்முட்டியை நடிக்க வைக்க தற்போது பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.

சமீபத்தில் விக்ரம் படம் வெளியீட்டுக்கு முன்பாக கேரளாவில் அதன் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசியபோது கூட, நானும் மம்முட்டியும் இணைந்து நடிப்பது பல வருடங்களாக தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது. கூடிய விரைவில் அது நடக்கும் என்று கூறி இருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
திலீப்பின் பறக்கும் பப்பன் படத்துக்கு இசையமைக்கும் அனிருத் ?திலீப்பின் பறக்கும் பப்பன் ... அதே படம்... அப்பா இசையமைத்த மற்றொரு ஹிட் பாடலை பயன்படுத்திய யுவன் அதே படம்... அப்பா இசையமைத்த மற்றொரு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in