Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » வந்த படங்கள் »

தி லெஜண்ட் ஆப் மைக்கேல் மிஸ்ரா (ஹிந்தி)

தி லெஜண்ட் ஆப் மைக்கேல் மிஸ்ரா (ஹிந்தி),The Legend of Michael Mishra
  • தி லெஜண்ட் ஆப் மைக்கேல் மிஸ்ரா (ஹிந்தி)
  • அர்ஷத் வர்சி
  • அதிதி ராவ் ஹைதாரி
  • இயக்குனர்: மனீஷ் ஜா
05 ஆக, 2016 - 17:33 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » தி லெஜண்ட் ஆப் மைக்கேல் மிஸ்ரா (ஹிந்தி)

நடிகர்கள் : அர்ஷத் வர்சி, அதிதி ராவ், போமன் இரானி

இயக்கம் : மனீஷ் ஜா

தயாரிப்பு : கிஷோர் அரோரா மற்றும் ஷரீன் மந்த்ரி


காமெடியுடன் கலந்த காதல் கதையில் வெளியாகியுள்ள படம் தான் ‛‛தி லெஜண்ட் ஆப் மைக்கேல் மிஸ்ரா''. இப்படம் ரசிகர்களை எந்தளவுக்கு கவர்ந்தது என்று இனி பார்ப்போம்...


கதைப்படி, பிழைப்பிற்காக கடத்தல்காரனாகவும், டானாகவும் இருப்பவர் மைக்கேல் மிஸ்ரா எனும் அர்ஷத் வர்சி. இவருக்கு தன் சின்ன வயதில் மனம் கவர்ந்த வர்ஷா சுக்லா எனும் அதிதி ராவ்வை தேடி கண்டுபிடித்து காதலிக்க வேண்டும் என்ற ஆசை. உடனடியாக தன் காதலியை தேட தொடங்குகிறார். அவர் நினைத்தப்படியே வர்ஷாவும் கிடைக்கிறார். அவருடன் நன்றாக பழகுகிறார். அதிதிக்கு பெரிய பாலிவுட் ஸ்டாராக வேண்டும் என்ற கனவு. அந்த லட்சிய கனவுடன் பயணிக்கும் அதிதியிடம் தன் காதலை சொல்கிறார் அர்ஷத். அர்சத்தின் காதலை ஏற்க வேண்டும் என்றால் கடத்தல் உள்ளிட்ட தவறான தொழில்களை நிறுத்த வேண்டும் என்று கூறுகிறார் அதிதி. இறுதியில் அதிதி, பெரிய ஸ்டாரானாரா?, அர்ஷத் வர்சியின் காதலை ஏற்றாரா.? என்பது படத்தின் காமெடி கலந்த மீதிக்கதை.


மைக்கேலாக வரும் அர்ஷத் வர்சி படம் முழுக்க வருகிறார், போகிறார் ஆனால் நடிப்பு ஒன்றும் ரசிகர்களை கவர்ந்த மாதிரி தெரியவில்லை.


வர்ஷாவாக வரும் அதிதி, பார்க்க அழகாக தெரிகிறார், ஆனால் நடிப்பு ஓகே என்ற அளவில் தான் உள்ளது.


படத்தில் நானும் இருக்கிறேன் என்ற அளவில் தான் வருகிறார், போகிறார் போமன் இரானி.


மாத்ருபூமி, அன்வர் படங்களை இயக்கிய மனீஷ் ஜா தான் இந்தப்படத்தின் இயக்குநர், தன் பங்கை சரியாக செய்யவில்லை என்று தான் தோன்றுகிறது. கதை, வசனம், காமெடி உள்ளிட்ட எல்லா விஷயங்களும் சுமார் ரகம் தான். இவைகளை போன்றே இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பும் அவ்வாறே இருக்கிறது. படத்தின் பெரிய பிளஸ் என்றால் கிளைமாக்ஸ் தான்.


டானாக இருக்கும் ஒருவருக்கு காதல் வர அதன்பின் என்ன நடக்கும்.... என நாம் ஏற்கனவே பல படங்களில் பார்த்த கதை தான் என்பதால் பொழுதுபோக வேண்டும் என்று நினைப்பவர்கள் இப்படத்தை பார்க்கலாம்.



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in