Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

ஜக்கன்னா (தெலுங்கு)

ஜக்கன்னா (தெலுங்கு),jakkanna
  • ஜக்கன்னா (தெலுங்கு)
  • சுனில்
  • நடிகை:மன்னாரா சோப்ரா
  • இயக்குனர்: வம்சி கிருஷ்ண அகேலா
01 ஆக, 2016 - 09:07 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » ஜக்கன்னா (தெலுங்கு)

ஜக்கன்னா - திரைவிமர்சனம்

நாயகன் - சுனில்

நாயகி- மன்னாரா சோப்ரா

இயக்குனர் - வம்சி கிருஷ்ண அகேலா


தெலுங்கு திரை உலகில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி தற்போது நாயகனாக உயர்ந்திருக்கும் சுனில் தனது முந்தைய தோல்விகளில் இருந்து மீண்டு வர இம்முறை "ஜக்கன்னா" வாக வருகிறார். எப்படி வந்திருக்கிறார் என்று பார்ப்போம்.


சுனில் ஏற்றிருக்கும் ஜக்கன்னா கதாபாத்திரம் நல்லது மட்டுமே செய்யும் கதாபாத்திரம் அதற்கு இடம் பொருள் ஏவல் எல்லாம் தெரியாது. தனக்கு யாராவது உதவி செய்திருந்தால் அவர்களுக்கு உதவி செய்வது மட்டுமே நோக்கமாக செயல்படும் ஜக்கன்னா. இப்படி உதவி செய்கையில், தனக்கு சிறு வயதில் உதவிய ஒரு ரவுடி கூட்டத்தின் தலைவனுக்கு (கபீர் சிங்) நன்றிகடனாக செயலாற்றும் போது பிரச்சனை வருகிறது.


ஜக்கன்னாவின் உதவிகள் அனேக நேரங்களில் கபிர் சிங்கிற்கு எரிச்சலை உண்டு பன்னுகிறது. இதன் விளைவாக கபீரின் சட்டவிரோத நடவடிக்கைகள் பாதிக்கப்படுகிறது. இதனால் ஜக்கன்னாவை கொலை செய்ய நினைக்கிறான் கபீர். இதில் இருந்து ஜக்கன்னா எப்படி தப்பித்தான்? இதில் நாயகி மன்னாரா சோப்ராவின் பங்கு என்ன என்பதை சிரிக்க சிரிக்க சொல்லி இருக்கிறார் இயக்குனர் வம்சி கிருஷ்ணா.


படத்தின் மிகப்பெரும் பலமே நகைச்சுவை காட்சிகள் தான். சப்தகிரி மற்று பிரித்வி தங்கள் பங்கினை சிரிக்க சிரிக்க செயல்படுத்தியிருக்கிறார்கள். எப்பொழுதெல்லாம் இருவரும் திரையில் வருகிறார்களோ அப்போது நம்மால் புண்னகைக்காமல் இருக்க முடியாது. பாலிவுட் நாயகி ப்ரியங்கா சோப்ராவின் உறவுக்கார பெண்ணான மன்னாரா சோப்ரா முதல் படம் போல் தெரியாத அளவிற்கு அழகாக நடித்திருக்கிறார். மொத்த படத்தையிம் தூக்கி சுமப்பவர் என்னவோ சுனில் தான். இரண்டாம் பாதியில் திரைக்கதையில் ஏற்படும் தொய்வை தனது நகைச்சுவை காட்சிகளால் ஈடு செய்கின்றார் சுனில்.


படத்தின் அடிப்படை கதையை விளக்க அதிக நேரம் எடுத்து கொண்டது படத்தின் பலவீனமே. சுனிலி‍ன் கதாபாத்திர குனாதிசயங்களை புரிந்துகொள்ள அதிக நேரம் பிடிக்கிறது. வில்லனை முதலில் பயங்கரமாக காட்டிவிட்டு கடைசியில் அதையும் நகைச்சுவையாக்கியிருக்கிறார்கள்.இரண்டாம் பாதியில் திண்டாடும் திரைக்கதையை நகைச்சுவை காட்சிகளே கரை சேர்க்கின்றன.


படத்திற்கு இசை தினேஷ், அளவான பின்னணி இசையால் காட்சிகளை மெருகேற்றியிருக்கிறார். வசனங்களை நிச்சயம் குறிப்பிட்ட வேண்டும் அளவாக காட்சிகளுக்கு பொருத்தமாக எழுதப்பட்டிருக்கிறது. இயக்குனர் வம்சி கிருஷ்ணா குறிப்பிடும் படியாக படத்தை அழகாக வழி நடத்தியிருக்கிறார். இரண்டாம் பாதியை இன்னும் கவனித்திருந்தால் பிரமாத வெற்றியை ஜக்கன்னா தட்டிச்சென்றிருப்பார். மொத்தமாக பார்த்தால் வழக்கமான கமர்ஷியல் படம் தான், வார இறுதியை இதனுடன் சிரித்து கழிக்கலாம்.


ஜக்கன்னா - ‍ சிரிப்பு மட்டும்



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in