ரஜினியை 'தல' ஆக மாற்றிய அமிதாப் பச்சன் | முன் ஜாமீன் பெற்ற மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் | என் மனைவி பற்றி அவதூறாக விமர்சிக்க வேண்டாம் ; மனோஜ் கே.ஜெயன் வேண்டுகோள் | ‛வேட்டையன்' வழக்கமான ரஜினி படம் அல்ல - ராணா | ரீ -ரிலீஸ் ஆகும் வில்லு திரைப்படம் | குபேரா படத்திற்காக குப்பை மேட்டில் தனுஷ் | நில மோசடி : நடிகை கவுதமி புகார் | சில கற்றார் பேச்சும் இனிமையே - குமரிமுத்து வீடியோவை பகிர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் பதிவு | கில்லி பார்த்துவிட்டு திரிஷாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கீர்த்தி சுரேஷ் | தக்லைப் படத்திலிருந்து மீண்டும் விலகினாரா ஜெயம் ரவி? |
தமிழில் ஜெய் நடித்த வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடிய சன்னி லியோன், அதன் பிறகு வடிவுடையான் இயக்கிய வீரமாதேவி என்ற படத்தில் நடித்தார். ஆனால் அந்த படம் பாதியில் நின்றது. அதையடுத்து ஓ மை கோஸ்ட் என்ற படத்தில் நடித்திருக்கிறார். அப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் தற்போது கன்னடத்தில் சாம்பியன் என்ற படத்தில் நடித்து வரும் சன்னி லியோன், தெலுங்கில் விஷ்ணு மஞ்சு நடிக்கும் ஜின்னா என்ற படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி இருக்கிறார். இந்த படத்தில் ரேணுகா என்ற கேரக்டரில் அவர் நடிக்கிறார். அது குறித்த போஸ்டர் தற்போது வெளியிடபட்டுள்ளது. சூர்யா என்பவர் இயக்கும் இப்படம் தெலுங்கில் தயாரானபோதும் தமிழ், ஹிந்தி, மலையாளம் போன்ற மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.