Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

முன்னா மைக்கேல் (ஹிந்தி)

முன்னா மைக்கேல் (ஹிந்தி),Munna Michael
  • முன்னா மைக்கேல் (ஹிந்தி)
  • டைகர் ஷெரப்
  • இயக்குனர்: சபீர் கான்
22 ஜூலை, 2017 - 14:33 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » முன்னா மைக்கேல் (ஹிந்தி)

நடிகர்கள் : டைகர் ஷெரப், நவாசுதீன் சித்திக், நித்தி அகர்வால்

இயக்கம் : சபீர் கான்

டைகர் ஷெரப் - சபீர் கான் கூட்டணியில் மூன்றாவதாக வெளிவந்திருக்கும் நடனம், ஆக்ஷ்ன் கலந்த ரொமான்ட்டிக் படம் தான் "முன்னா மைக்கேல்". இந்தப்படம் ரசிகர்களை கவர்ந்ததா... இல்லையா... என்று இனி பார்ப்போம்...!

கதைப்படி, மும்பையில் வாழும் மைக்கேல் ஜாக்சனின் தீவிர ரசிகரான, நடன கலைஞரான முன்னா எனும் டைகர் ஷெரப், கிளப்புகளில் நடனம் ஆடி அன்றாட வாழ்க்கையை ஓட்டுபவர். மும்பையில் திடீரென கிளப்புகளை எல்லாம் மூடிவிட, பிழைப்பு தேடி டில்லி புறப்புடுகிறார். அங்கு டைகரின் நடனத்தை கண்டு அசந்து போகும் பிரபல ஸ்டார் ஹோட்டல் அதிபரும், அண்டர் தாதாவுமான மகேந்திரா புஜி எனும் நவாசுதீன் சித்திக், தான் ஒருதலையாக காதலிக்கும் டோலி எனும் ஹீரோயின் நித்தியை கவர, தனக்கும் நடனம் கற்று கொடுக்க சொல்லி டைகரிடம் கேட்கிறார். டைகரும், அவருக்கு நடனம் கற்று கொடுக்கிறார். ஒரு சமயம் நித்தியை, டைகர் ஷெரப்பும் காண அவருக்கும், நித்தி மீது காதல் மலருகிறது. இப்படிப்பட்ட சூழலில் நித்தியை காதலித்து கரம் பிடிப்பது டைகரா...?, நவாசுதீனா...? என்பது முன்னா மைக்கேல் படத்தின் மீதிக்கதை.

முன்னாவாக டைகர் ஷெரப் சிறப்பாக நடித்திருக்கிறார். படத்திற்கு படம் அவரது நடிப்பு திறன் அதிகரித்து கொண்டே போகிறது. குறிப்பாக இந்தப்படத்தில் நடனத்தில் அசத்தியிருக்கிறார் மனிதர்.

கிட்டத்தட்ட ஹீரோ டைகர் இணையான கதாபாத்திரம் நவாசுதீன் சித்திக் உடையது. ஆனால் அவரது நடிப்பு ஏனோ ரசிகர்களை கவரவில்லை, சுமார் என்ற அளவில் தான் உள்ளது.

நித்தி அகர்வாலின் நடிப்பு ஓ.கே., திறமையான நடிகர்களான ரோனித் ராய், பங்கஜ் திரிபாதி ஆகியோர் இப்படத்தில் முழுமையாக வீணடிக்கப்பட்டுள்ளனர்.

முன்னா மைக்கேல் படத்திற்கு ஏகப்பட்ட பேர் இசையமைத்திருப்பதால் என்னவோ சில பாடல்கள் அருமையாகவும், சில பாடல்கள் சத்தமாகவும் உள்ளது. சந்தீப்பின் பின்னணி இசை இதம்.

ஹரி வேதானந்தமின் ஒளிப்பதிவு ஓவியப்பதிவாக தெரிகிறது. படத்தொகுப்பாளர் மன்னன் சாகர், எடிட்டிங்கில் இன்னும் கொஞ்சம் பட்டையை தீட்டியிருக்கலாம்.

ஹீரோபன்டி, பாகி படங்களின் வெற்றியை கொடுத்த இயக்குநர் சபீர் கான், இந்தப்படத்தில் அந்த வெற்றியை தக்க தவறிவிட்டார் என்றே தோன்றுகிறது. கதை, வலுவாக இல்லாததும், கதையின் அடுத்தடுத்த நகர்வுகளை முன்கூட்டியே கணிக்கும் பலவீனமான திரைக்கதையும், பின்பாதி சற்று இழுவையாக போரடிப்பதும் ரசிகனை சலிப்படைய செய்கின்றன. இருப்பினும், டைகர் ஷெரப்பின் நடனம் மற்றும் ஆக்ஷ்னுக்காக முன்னா மைக்கேல் படத்தை ஒருமுறை பார்க்கலாம்.

மொத்தத்தில், முன்னா மைக்கேல் - ஏமாற்றம்

ரேட்டிங் : 2/5



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in