Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

டெரர் (தெலுங்கு)

டெரர் (தெலுங்கு),Terror
  • டெரர் (தெலுங்கு)
  • ஸ்ரீகாந்த் (தெலுங்கு)
  • நிகிதா
  • இயக்குனர்: சதீஷ்
27 பிப், 2016 - 12:10 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » டெரர் (தெலுங்கு)

ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி இடை நீக்கம் செய்யப்படுகின்றார். இதனால் குடும்பத்தில் பிரச்சனைகள் தலை தூக்குகின்றன. தனது தந்தையை எதிர் கொள்ள முடியாமல் குடும்பத்தை பிரிந்து இருக்கிறார். இப்படியான நிலையில் ஒரு விசாரனையில் சின்ன ஒரு பொறி தட்டுகிறது. அது இவருக்கு ஒரு பெரும் சதிதிட்டத்தை அடையாளம் காட்டுகிறது.


ஒரு பெரு நகரை தகர்ப்பது தான் அந்த திட்டம். இந்த திட்டத்தின் பின்னால் ஒரு தீவிரவாத கும்பலும் இருக்கிறது. காவல் துறையைச் சார்ந்த சிலர் இதற்கு உடந்தையாகவும் இருக்கிறார்கள் இது போக அரசியல்வாதிகளின் இடையூறும் சேர்ந்து கொள்கிறது. இவற்றை எல்லாம் எப்படி அந்த போலீஸ் அதிகாரி சமாளித்து வெல்கிறார் என்பதை எடுத்துக்கொண்ட கதைக்கு நியாமாக திரைக்கதை அமைத்து சொல்லியிருக்கிறார் டெரர் பட இயக்குனர் சதீஷ்.


நீண்ட நாட்களாக சதாரண கமர்ஷியல் படங்களில் மட்டுமே நடித்து வந்த ஸ்ரீகாந்த் இந்த முறை ஒரு ஆக்ஷன் த்ரில்லர் கதையில் நடித்திருக்கிறார். அவருக்கு இது பொருந்தியும் இருக்கிறது. தோற்றத்திலும் சரி நடை உடை பாவனைகளிலும் அடக்கி வாசித்து கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.


படத்தின் திரைக்கதை மிக நேர்த்தியாக அமைத்திருக்கிறார்கள், அதில் இடம் பெரும் தீவிரவாத தாக்குதல்களின் பின்னணியை விவரிக்கும் காட்சிகளில் உழைப்பு தெரிகிறது. மொத்தமாக ரசிகர்களை கட்டிப்போடும் அளவிற்கு திரைக்கதையில் மெனக்கெட்டிருக்கிறார்கள். வழக்கமான கமர்ஷியல் விசயங்களை சேர்க்காமல் இருந்ததற்கே நிச்சயம் இவர்களை பாராட்டியாக வேண்டும்.


படத்தில் சில மிகைப்படுத்தப்படும் வசனங்களை சற்று தவிர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். மேலும் மிகச்சில லாஜிக் பிரச்சனைகள் இருக்கின்றன (விமர்சன பார்வையுடன் படம் பார்க்கும் பட்சத்தில்). மூலக்கதைக்குல் நுழைய திரைக்கதை போதுமான அவகாசத்தை எடுத்துகொள்கிறது அதை சற்றே தவிர்த்திருந்தால் இன்னும் மிரட்டியிருக்கும். இயக்குனர் சதீஷ் அடுத்தடுத்த படத்தில் இந்த தவறுகளை சரி செய்வார் என்று எதிர் பார்ப்போமாக. நீங்கள் காரமான மசாலா எதிர்பார்த்து பாப் கார்னுடன் தியட்டரில் உட்கார்ந்தால் அது உங்களுக்கு கிடையாது. அதே நேரத்தில் உங்களை திருப்தி படுத்தும் அளவிற்கு படம் உங்களை விரட்டி மிரட்டும்.


டெரர் - மிரட்டும்



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in