தமிழ்திரையுலகில் புதிய மன்னர்கள் படத்தின் மூலம் அறிமுகமாக நடிகர் ஸ்ரீமன், முதன்முதலாக தயாரிப்பாளராக உருவெடுத்திருக்கும் புதியபடம் தான் பரிமளா திரையரங்கம்.
இதுவரை திரையரங்கை பின்னணியாக வைத்து பெரும்பாலும் படங்கள் தயாரிப்பதில்லை ஒரு சில படங்கள் மட்டுமே வந்திருக்கிறது. அந்த வரிசையில் பரிமளா திரையரங்கம் படம் அடங்கும். டூரிங் டாக்கீஸ் என்று கிராமபகுதியில் செல்லமாக அழைக்கப்படுவது திரையரங்கம். அப்படி ஒரு திரையரங்கின் ஆப்ரேட்டர் மகன் தான் படத்தின் நாயகன். தான் பார்த்து பூரித்துபோன திரையரங்கம் கல்யாண மண்டபமாக மாறப்போகிறது, என்று அறிந்ததும், அதை அவனே வாங்கி எப்படி வெற்றிரமான திரையரங்கமாக மாற்றுகிறான் என்பதே கதை.
இப்படத்தில் புதுமுகம் விகாஸ் நாயகனாக அறிமுகமாகிறார். இவர் மறைந்த நகைச்சுவை நடிகர் ஐசரி கணேசின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது. கதாநாயகியாக நந்தி, ரேணிகுண்டா படத்தில் நடித்த சனுஷா நடிக்கிறார். இவர்களுடன் இளவரசு, கோட்டைக்குமார், நித்திஷ், பொல்லாதவன் கிஷோர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். புதியவரான சரவண ஜீவன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்ட் செய்கிறார். தமிழ்ப்படம் படத்தின் இசையமைப்பாளர் கண்ணன் இசையமைக்கிறார், பாலபரணி ஒளிப்பதிவு செய்கிறார்.