மகேந்திரன்
சுவாதிகா நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மகேந்திரன் நாயகனாக நடிக்கும் முதல் படம் "முதல் காதல் மழை'. நடிகை சுவாதிகா கதாநாயகியாக நடிக்கிறார். ராஜேஷ், நிழல்கள் ரவி, வனிதா, நெல்லை சிவா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தை இயக்குபவர் மதுவண்ணன். இவர் தாசரி நாராயணராவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். 80க்கும் மேற்பட்ட இந்தி படங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறார்.
இளைஞர்களையும், யுவதிகளையும் கவரும் விதத்தில் காதலுக்கும் இசைக்கும் முக்கியத்துவம் அளித்து படம் உருவாகிறது. பாடல் காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டுள்ளன. இசை - சாணக்யா. பாடல்கள் - வைரமுத்து, யுகபாரதி, டாக்டர் கிருதியா. ஒளிப்பதிவு -ஆகாஷ் அசோக்குமார். தயாரிப்பு - மாருதி குளோவர் ஆர்ட்ஸ்.