சிலந்தி படத்தை தயாரித்த ஜி கம்பெனி அடுத்து தயாரித்து வரும் படம் ஸ்வேதா நம்பர் 5/10 வெலிங்டன் ரோடு. டைரக்டர் சஞ்ஜெய் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் இப்படத்தின் நாயகனாக ஹரிஸ் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சாவ்லா நடிக்கிறார். ஷிவ் என்ற மாடல் வில்லனாக அறிமுகமாகிறார். இசை - சூர்யா, ஒளிப்பதிவு - எஸ்.விவேக்குமார்.
கதைப்படி நாயகன் ஹரிஸ் பைக் ரேஸ் வீரர். அவர் சம்பந்தப்பட்ட பைக் ரேஸ் மற்றும் சண்டைக்காட்சி பெங்களூர்-மைசூர் நெடுஞ்சாலையில் படமாக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பயன்படுத்த இன்னமும் திறக்கப்படாத அந்த சாலையில், 20 பைக்குகளை பயன்படுத்தி, அந்த சண்டை காட்சி படமானது. ஹரிஸூடன் சண்டை போட்டவர்களில் பாதி பேர் அவரது நண்பர்கள். மீதி ஸ்டண்ட் கலைஞர்கள்.
படத்தின் ஹைலைட் சமாச்சாரம் இதுவரை ஹோம்லியாக வந்த கீர்த்தி சாவ்லா இந்த படத்தில் கவர்ச்சியை கட்டவிழ்த்து விட்டிருப்பதுதான். நீச்சல் உடையில் தோன்றி களேபரத்தை அரங்கேற்றியிருக்கிறாராம் கீர்த்தி. படத்தில் கீர்த்தி ஒரு பணக்கார கல்லூரி மாணவி. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், தனது பாய் ப்ரண்டை வீட்டுக்கு அழைப்பார். அவர் வருவதற்கு முன்னால், நீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் குளிக்கிறார். அந்த நேரம் பார்த்து வில்லன் ஷிவ், கீர்த்தியின் வீட்டுக்குள் நுழைந்து கற்பழிக்க முயற்சிக்கிறார். இந்த காட்சி கிளுகிளுப்புடனும் எடுக்கப்பட்டிருக்கிறதாம்.
ஸ்வேதாவை ரொம்பவே நம்பியிருக்கிறார் கீர்த்தி!