பிரபல நடிகர்களுக்கு பிஆர்ஓ.,வாக இருந்த மதுரை செல்வம் முதன்முறையாக தயாரித்து வரும் படம் சீனி.
வேலம்மாள் சினி கிரியேஷன் எனனும் புதிய பட நிறுவனத்தை உருவாக்கி, மதுரை செல்வம் தயாரித்து வரும் சீனி படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் இயக்குனர் ராஜதுரை. இவர் ஐ லவ் யூ டா என்ற படத்தை இயக்கிவர் ஆவார்.
எம்.பி.ஏ., படித்த நடுத்தர குடும்பத்து பையன், வாழ்க்கையில் மிகப்பெரிய பிஸினஸ்மேனாக ஆக ஆசைப்படுகிறான். அவனது லட்சியத்திற்கும், காதலுக்கும் சீதா என்னும் யானை உறுதுணையாக இருக்கிறது. யானையின் உதவியால், நாயகன் தனத லட்சியத்தை எப்படி அடைகிறான்? என்பதையும், தன் காதலியை எப்படி கரம்பிடிக்கிறான்? என்பதையும் முழுக்க முழுக்க காமெடிக் களத்தில் சொல்லியிருக்கும் படம் தான் சீனி என்கிறார் இயக்குனர் ராஜதுரை.
ஓவியா கதாநாயகியாக நடிக்க, சஞ்சீவி எனும் புதுமுகம் நாயகனாக அறிமுகமாகிறார். பரத் எனும் காமெடிமுகம் காமெடியனாக அறிமுகமாகியுள்ளார். முக்கியமான வேடத்தில் டத்தோ ராதாரவி, பருத்திவீரன் சரவணன், பவர்ஸ்டார் சீனிவாசன் திடீர் நகர் ரவுடியாகவும், நாயகன் வேலுநாயக்கராகவும் இரட்டை வேடமேற்று நடிக்கிறார். மற்றும் முன்னணி நட்சத்திரங்கள் அருள்தாஸ், ரவிமரியா, சின்னி ஜெயந்த், சாமிநாதன், டி.பி.கஜேந்திரன், மீரா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.
மூன்று பாடல்கள், இரண்டு சண்டைக் காட்சிகள். படம் முழுக்க காமெடிக் காட்சிகள் நிரம்பிய சீனி படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசை அமைக்க, பாடல்களை வைரமுத்து எழுதி உள்ளார்.
இப்படம் மிகுந்த பொருட் செலவில் குறைந்த நாள் தயாரிப்பாக உருவாகி விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.