தனிப்பட்ட வாழ்க்கையில் கேமரா வைக்க முடியாது: ராஷ்மிகா மந்தனா | எக்ஸ் தளம் நெகட்டிவிட்டி நிறைந்தது : ரவி தேஜா கருத்து | ராஜமவுலி - மகேஷ்பாபு படத்தின் பெயர் 'வாரணாசி'? | ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? |
கலர்ஸ் தமிழ் சேனல் வருகிற ஞாயிற்கிழமை (அக் 3) சண்டே சினி காம்போவில் தெலுங்கில் வெற்றி பெற்ற இரண்டு படங்களை டப் செய்து ஒளிபரப்புகிறது. பகல் 12 மணிக்கு அசோக் தி லயன் என்ற படத்தை ஒளிபரப்புகிறது. இந்த படம் சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த ரொமான்டிக் - ஆக்ஷன் கலந்த திரைப்படமாகும். ஜுனியர் என்டிஆர், சமீரா ரெட்டி, பிரகாஷ் ராஜ் மற்றும் சோனு சூட் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
அசோக் என்ற இளைஞன் (ஜுனியர் என்டிஆர் ), அவனது பாட்டியின் இறப்பிற்கு காரணமானவன் என்று பழி சுமத்தப்பட்ட பிறகு அதிலிருந்து எப்படி மீண்டான் என்பதைச் சுற்றி நகரும் கதை. திறமை வாய்ந்த ஒரு டான்சரான அஞ்சலி (சமீரா ரெட்டி) வில்லன் சோனு சூட்டுக்கு எதிராக கோர்ட்டில் சாட்சி சொல்லி சிக்கலில் மாட்டிக் கொள்ள அவரை அசோக் எப்படி மீட்கிறார் என்கிற கதை.
மாலை 3.30 மணிக்கு ராஜசிங்கம் என்ற படம் ஒளிபரப்பாகிறது. இயக்குனர் கே.வி. விஜயயேந்திர பிரசாத்தின் இயக்கத்தில் 2011ம் ஆண்டு வெளிவந்த படம், இதில், நாகார்ஜுனா, ஸ்நேகா மற்றும் பேபி ஆனி ஆகியோர் முக்கிய கதாபத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இது வரலாற்று காலகட்ட கதை. மல்லம்மா என்ற ஆதரவற்ற சிறுமி பாடும் திறன் கொண்டவள். ஆனால் அவள் பாடுவதற்கு தடை போடுகிறார்கள். அவளுக்கு பாடல் ஆசிரியராக வருகிற நாகார்ஜுனா அவளுக்கு முறைப்படி சங்கீதம் கற்றுக் கொடுத்து அவளை எதிர்ப்புகளை மீறி எப்படி பாட வைக்கிறார் என்பது கதை.