எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
சர்வதேச புகழ்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இந்திய தொலைக்காட்சிக்கு வருவது புதிதல்ல. கோன் பனைகா குரோர்பதி, பிக் பாஸ், சேலன்ஞ், சூப்பர் டேலண்ட் என பல நிகழ்ச்சிகள் வெளிநாட்டில் இருந்து இங்கு இறக்குமதி ஆகியுள்ளது. சமீபத்திய வரவாக மாஸ்டர் செப் நிகழ்ச்சி வந்துள்ளது.
இந்த வரிசையில் அடுத்து வருகிறது சர்வைவர். இருக்கிற நிகழ்ச்சிகளிலேயே இதுதான் ஆபத்தானது. இந்த நிகழ்ச்சி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சி பற்றிய தகவல்கள் முன்பே கசிந்திருந்தாலும், இப்போதுதான் சேனல் தரப்பில் இருந்து உறுதிப்படுத்தி அறிவித்திருக்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சி பற்றி தெரிந்து கொள்ளலாம்: பிக் பாஸ் வீட்டுக்குள் நடக்கிற மாதிரி இது காட்டுக்குள் நடக்கிற போட்டி. இதில் கலந்து கொள்கிறவர்களை ஒரு தீவில் உள்ள அடர்ந்த காட்டுக்குள் இறக்கி விட்டு விடுவார்கள். அந்த அடர்ந்த காட்டுக்குள் யார் 100 நாட்கள் வரை தாக்குபிடித்து நிற்கிறார்களோ அவர்களே வெற்றியாளர்கள். எலிமினேட் ஆகிறவர்களை ஹெலிகாப்படரில் வந்து அழைத்து போய்விடுவார்கள்
15 முதல் 20 போட்டியாளர்கள் இதில் கலந்து கொள்வார்கள். உணவு, தண்ணீர், தங்குமிடம் என அனைத்து அடிப்படைத் தேவைகளையும் போட்டியாளர்களே உருவாக்கிக் கொள்ள வேண்டும். போட்டியாளர்களுக்கு பல வித டாஸ்குகள் கொடுக்கப்படும். அதிலும் அவர்கள் ஜெயிக்க வேண்டும். தற்போது போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு உடல் பரிசோதனை நடந்து வருவதாக கூறப்படுகிறது.