ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

சின்னத்திரை இயக்குநர் திருச்செல்வம் இயக்கிய கோலங்கள் தொடர் சூப்பர் ஹிட்டானது. அந்த சீரியலின் வெற்றிக்கு முக்கிய காரணம் வில்லன் கதாபாத்திரத்தில் ஆதியாக நடித்த அஜய் கபூரும் ஒருவர் சொல்லலாம். இதனை தொடர்ந்து எதிர்நீச்சல் தொடரிலும் மிகவும் வலுவான வில்லன் கதாபாத்திரத்தை வடிவமைத்திருந்தார் திருச்செல்வம். ஆனால், அந்த தொடரில் தவிர்க்க முடியாத காரணங்களால் சீக்கிரமே முடிவுக்கு வந்தது.
இந்நிலையில், எதிர்நீச்சல் சீசன் 2 அதிக எதிர்பார்ப்புகளுக்கிடையில் அண்மையில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. பல புதிய கதாபாத்திரங்களும், நடிகர்களும் அறிமுகமாகியுள்ள இந்த தொடரில் கோலங்கள் ஆதியும் நடிக்க இருக்கிறாரா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதற்கு காரணம் எதிர்நீச்சல் தொடரில் நடித்து வரும் பிரியதர்ஷினி அஜய் கபூருடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். எனவே, ஆதி-திருச்செல்வம் காம்போ எதிர்நீச்சல் 2விலும் தொடருமா? என பல ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.




