சல்மான் கான் கமெண்ட்டுக்கு பதிலளிப்பாரா ஏஆர் முருகதாஸ் ? | காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' | ஓடிடியில் நேரடி படங்கள், வெப் தொடர்கள் அறிவிப்பு | நடிப்பில் விக்ரமை வெல்ல தொடர்ந்து போராடுவேன்: துருவ் விக்ரம் | அம்மாவின் பச்சை நிற கண்ணை பெற்ற அழகான மகள்: அக்ஷராவுக்கு கமல் பிறந்த நாள் வாழ்த்து | பிளாஷ்பேக்: கதை நாயகனாக முதல் படத்தில் தோற்ற எஸ்.எஸ்.ராஜேந்திரன் | நாற்று நட்டேன், செங்கல் சூளையில் வேலை செய்தேன்: அனுபமா பரமேஸ்வரன் | 35 நாளில் முடிந்த 'டூரிஸ்ட் பேமிலி' அபிஷன் படம் | உதவி செய்பவர்களை காயப்படுத்தாதீர்கள்: 'துள்ளுவதோ இளமை' அபிநய் |
மாடல் அழகியாக இருந்த அபிராமி வெங்கடாசலம் 2016ல் 'மிஸ்.தமிழ் நாடு' பட்டம் பெற்ற பிறகு கவனிக்கப்பட்டார். சின்னத்திரை தொடர்களில் நடிகையாகவும், தொகுப்பாளராகவும் இருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு மேலும் பிரபலமாகி சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். நோட்டா, களவு படங்களில் சிறு கேரக்டரில் நடித்த அபிராமி அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார்.
அதன் பிறகு ராக்கெட்டரி, வான் மூன்று படங்களில் நடித்தார். அவர் நடித்து முடித்துள்ள துருவ நட்சத்திரம், நெருஞ்சி உள்ளிட்ட சில படங்கள் வெளிவரவில்லை. புதிய வாய்ப்புகளும் இல்லை. இதனால் மீண்டும் சின்னத்திரைக்கே திரும்பி இருக்கிறார். ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் 'நினைத்தேன் வந்தாய்' தொடரின் மூலம் ரீ என்ட்ரியாகி இருக்கிறார். இந்தத் தொடரில் 'சுடர்' கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்த ஜாஸ்மின் ரத் விலக, அவருக்கு பதிலாக அபிராமி நடிக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது : தொலைக்காட்சியில் தொகுப்பாளராகத்தான் எனது கலை பயணத்தை தொடங்கினேன். கொஞ்சம் இடைவெளி விழுந்த மாதிரி இருந்தது. இதனால் இன்னும் சில விஷயங்களை முயற்சி பண்ணி பார்க்கலாம் என்று முடிவு செய்து மீண்டும் சின்னத்திரைக்கு வந்திருக்கிறேன். இந்த தொடரில் வாய்ப்பு கிடைத்தது ஆச்சர்யமானது.
ரீ பிளேஸ் கேரக்டரில் நடிப்பது கொஞ்சம் சவாலானது. மக்கள் ஒரு கேரக்டரில் ஒரு முகத்தை பார்த்து பழகி இருப்பார்கள். அதே கேரக்டரில் இன்னொரு முகத்தை ஏற்றுக் கொள்வதற்கு கொஞ்சம் கால அவகாசம் எடுக்கும். அதற்காக கடுமையாக உழைக்க வேண்டும் என்பதும் எனக்கு தெரியும். இந்தத் தொடரில் நான்கு குழந்தைகளை அக்கறையாக கவனித்துக் கொள்கிற அம்மாவாக நடிக்கிறேன். பெண்கள் எல்லாருக்குள்ளேயும் தாயன்பு இயல்பாகவே இருக்கும். அதனால் நடிப்பதற்கும் எளிதாக இருக்கிறது. என்கிறார்.