சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' டீசர் வெளியீடு | சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு | சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது | பவன் கல்யாணை பாராட்டும் ஸ்ரீலீலா | 'மாத்ருபூமி' ஆக மாறிய 'பேட்டில் ஆப் கல்வான்' | முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2' | கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய் | அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் |

சினிமாவில் சிறு சிறு ரோல்களில் நடித்து பின் சின்னத்திரையில் ஹீரோயினாக களமிறங்கினார் பிரியங்கா நல்காரி. தமிழில் இவர் நடித்த ரோஜா சீரியலால் புகழின் உச்சத்திற்கு சென்றார். தொடர்ந்து ஜீ தமிழில் சீதா ராமன் தொடரில் ஹீரோயினாக கமிட்டானார். தனது நீண்டநாள் காதலரை மலேசியாவுக்கு சென்று திருமணம் செய்து கொண்ட பிரியங்கா கணவருக்காக நடிப்பதை கைவிடுவதாக சொன்னார். பின் கணவரை பிரிந்து வாழ்ந்த சில நாட்களில் மீண்டும் ஜீ தமிழில் நளதமயந்தி தொடரில் ஹீரோயினாகும் வாய்ப்பை பெற்றார். ஆனால், காதல் கணவருடன் மீண்டும் சேரவே அந்த தொடரிலிருந்தும் விலகி தற்போது மலேசியாவில் புதிதாக ஹோட்டல் ஒன்றை ஆரம்பித்துள்ளார். இதுதொடர்பாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டு 'தொழிலதிபராக உணர்கிறேன்' என பெருமையாக பதிவிட்டுள்ளார்.