மனிஷாவுக்கு கை கொடுக்குமா 'மெஸன்ஜர்' | பிளாஷ்பேக் : 'ஷோலே' படத்தை தழுவி உருவான 'முரட்டு கரங்கள்' | பிளாஷ்பேக்: காப்பி ரைட் வழக்கில் சிக்கிய சிவாஜி படம் | இந்தியா, ஆசியான் திரைப்பட விழா: சென்னையில் தொடங்கியது | முதல் நாள் வசூலில் முந்தும் 'டியூட்' | அஜித் 64 : தீபாவளி அறிவிப்பு? | சூர்யா பட இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா | எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை : கண்ணதாசனை புகழ்ந்த கமல் | நான் ஒரு கிளீன் ஸ்லேட் : மமிதா பைஜு | ‛அரசன்' புரொமோ பயராக உள்ளது : அனிருத்திற்கு சிம்பு பாராட்டு |
சின்னத்திரை புதுமுகமான ப்ரீத்தா ரெட்டி தமிழில் இனியா மற்றும் சிறகடிக்க ஆசை ஆகிய தொடர்களில் நடித்து வருகிறார். அதிலும், சிறகடிக்க ஆசை தொடரில் இவர் நடித்து வரும் ஸ்ருதி கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் ரீச்சாகியுள்ளது. இதுகுறித்து அண்மையில் பேட்டியளித்துள்ள ப்ரீத்தா, 'நான் இதற்கு முன் பல சீரியல்களில் நடித்திருந்தாலும் சிறகடிக்க ஆசை தொடர் தான் எனக்கு அதிகமான பிரபலத்தை கொடுத்தது. இப்போது என்னை பலரும் 'பல குரல்' என்று தான் கூப்பிடுகிறார்கள். இயக்குநர் முதலில் கதை சொல்லும் போது ஹீரோ கேரக்டர் போலவே என்னுடைய கேரக்டரும் இருக்கும் என்று சொன்னார். உள்ளே வந்த பின்பு தான் எனக்கு என்னுடைய கேரக்டர் பற்றி தெரிந்தது. ஆனால், இப்பொழுதும் என்னுடைய கேரக்டரை புரிந்து கொள்ள முடியவில்லை. ஒருநாள் ஒரு மாதிரி, மற்றொரு நாள் வேறொரு மாதிரி இருக்கிறது. இன்னும் இயக்குநர் என்னவெல்லாம் சொல்லப் போகிறாரோ? என்று தெரியவில்ல' என ப்ரீத்தா அந்த பேட்டியில் கலகலப்பாக பேசியுள்ளார்.