சினிமாவில் 60வது ஆண்டை தொட்ட வெண்ணிற ஆடை மூர்த்தி | ஜெயமோகன் படத்துக்கு இந்த நிலையா? | வில்லனாக மாறிய சேரன் | டான்ஸ் ஆட வெச்சிட்டாங்க : பிரபு நெகிழ்ச்சி | ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? |
சின்னத்திரை நடிகை பவித்ரா ஜெயராம் அண்மையில் கார் விபத்தில் இறந்தார். மாரி சீரியலின் தெலுங்கு வெர்ஷனில் நடித்து வந்த பவித்ரா ஜெயராம் இறப்பு குறித்து அந்த சீரியலின் ஹீரோயின் ஆஷிகா படுகோன் உருக்கமாக பதிவிட்டிருந்தார். இந்நிலையில், சக நடிகரான சந்திரகாந்த், பவித்ராவின் இறப்பு குறித்து வீடியோ வெளியிட்டுவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவர் தனது வீடியோவில், 'பவித்ரா கார் விபத்தினால் காயம் ஏற்பட்டு இறக்கவில்லை. கார் விபத்தில் என் தலை மற்றும் கையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கசிந்தது. இதைபார்த்த அதிர்ச்சியில் பெருமூச்சு விட்ட பவித்ரா ஸ்டோக் பாதிப்பு ஏற்பட்டு இறந்திருக்கிறார். பவித்ராவின் இழப்பை என்னால் தாங்க முடியவில்லை' என்று அந்த வீடியோவில் கூறியுள்ளார்.
பவித்ரா ஜெயராமும் சந்திரகாந்தும் சில வருடங்களாக காதலித்து வந்த நிலையில், இருவரும் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. பவித்ரா இறந்தது முதலே மன உளைச்சலில் இருந்த சந்திரகாந்த் தற்போது தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சின்னத்திரை உலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.