ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
சின்னத்திரையில் ஒருகாலக்கட்டத்தில் திகில் தொடருக்கு நல்ல மவுசு இருந்தது. அதன்பின் பலவருடங்களாக திகில் தொடர் எதுவும் வெற்றி பெறாத நிலையில், டப்பிங் தொடர்களால் தமிழ் தொலைக்காட்சிகள் மீண்டும் சில திகில் தொடர்களை தயாரித்து ஒளிபரப்பு செய்து வந்தனர். அவ்வாறாக நந்தினி, அருந்ததி போன்ற தொடர்களுக்கு கிடைத்த வெற்றியையடுத்து அனாமிகா என்கிற புதிய அமானுஷ்ய தொடர் வருகிற 19ம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது. இதில், தர்ஷக், ஆகாஷ் பிரேம்குமார் மற்றும் அக்ஷதா தேஷ்பாண்டே ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதன் புரோமோ தற்போது வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்களுக்கும் இந்த தொடர் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.