'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சிக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. அண்மையில் லொள்ளு சபா நடிகர்களின் ரீ-யூனியன் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், லொள்ளு சபா நடிகர்களில் ஒருவரான ஆண்டனி மட்டும் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், 'சினிமாவில் எப்படியாவது சாதிக்க வேண்டும் என்று போராடினேன். ஆனால் நான் ஆஸ்துமா பிரச்னையால் பாதிக்கப்பட்டேன். தொடர்ந்து இடுப்புக்கு கீழ் நீர்கோர்த்து நடக்க முடியாமல் போனது. என்னால் சாதரணமாக மற்றவர்களை போல் படுத்து தூங்க முடியாது. உட்கார்ந்து கொண்டோ, நின்றுகொண்டோ தான் தூங்க முடியும். படுத்தால் மூச்சுத்திணறல் வரும். என்னை பார்த்துக்கொள்ள யாருமில்லை. சந்தானம் பேச்சை நான் கேட்கவில்லை. கெட்ட நண்பர்களால் என் வீடு, பணம் எல்லாம் போனது. ஆனால், கஷ்டப்படும் நேரத்தில் சந்தானம் தான் உதவுகிறார். சேசு அப்பா நான் இருக்கிறேன். பயப்படாதே என்று சொன்னார். அவர் இறந்தது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது' என்று கூறியுள்ளார். அவரது பரிதாபநிலை பார்க்கும் ரசிகர்கள் பலரையும் கண்கலங்க செய்துள்ளது.