இந்த வார ஓடிடியில் வரிசைக்கட்டும் க்ரைம் த்ரில்லர் படங்கள்....! | நானி படத்தில் இணைந்த பிரித்விராஜ் | ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் ‛டெக்ஸ்லா' : யுவன் இசை | நடிகையுடன் உறவு: விவாகரத்து கேட்டு நடிகர் விஜய் மனைவி சங்கீதா மனு | மோடி, அமித்ஷாவிடம் வாழ்த்து பெற்ற விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா | சினிமாவில் அரசியல் பேசுவது தவறில்லை: சிவகார்த்திகேயன் | மலையாள இயக்குனர் டைரக்ஷனில் நடிக்கும் விக்ரம் | தேர்தல் நெருங்கும் வேளையில் முதல்வரை நேர்காணல் செய்த மோகன்லால் | ரசிகர்களை குஷிப்படுத்திய பேட்ரியாட் செகண்ட் லுக் போஸ்டர் | மோகன்லாலின் முதல் படத்தில் இணைந்து நடித்த நடிகர் காலமானார் |

நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் கடைசி மகளான ஸ்ரீதேவி விஜயகுமார் தமிழில் காதல் வைரஸ், தித்திக்குதே ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர். திருமணத்திற்கு பின் படங்கள் நடிப்பதை குறைத்துக் கொண்ட அவர், தற்போது சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஜோடி ஆர் யூ ரெடி என்கிற நிகழ்ச்சியில் நடுவராக ஸ்ரீதேவி கலந்து கொண்டுள்ளார். இப்போதும் பார்ப்பதற்கு இளமையாக இளம் ஹீரோயின்களுக்கு டப் கொடுக்கும் அழகுடன் ஸ்ரீதேவி ஜொலிக்கிறார். எனவே, அவரை மீண்டும் நடிக்க வர சொல்லி ரசிகர்கள் அன்பு தொல்லை செய்து வருகின்றனர்.




