ஜேசன் சஞ்சய் எடுத்த சரியான முடிவு : விக்ராந்த் வெளியிட்ட தகவல் | உபேந்திரா-பிரியங்கா திரிவேதி மொபைல் போன்களை ஹேக் செய்த பீஹார் வாலிபர் கைது | லோகா படத்தின் புதிய பாகத்தில் மம்முட்டி : துல்கர் சல்மான் தகவல் | நாகார்ஜுனா மீதான அவதூறு கருத்துக்கு ஒரு வருடம் கழித்து வருத்தம் தெரிவித்த தெலுங்கானா அமைச்சர் | சின்மயியிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்த ஜானி மாஸ்டரின் மனைவி | 'ஜனநாயகன்' வாங்குவதில் வினியோகஸ்தர்கள் தயக்கம் ? | ராஜமவுலி, மகேஷ்பாபு பட தலைப்பு அறிவிப்பு விழா, பிரம்மாண்ட ஏற்பாடுகள் | ரஜினி, கமல் படத்திலிருந்து விலகிய சுந்தர்.சி : மன்னிப்பு கேட்டு அறிக்கை | கொரில்லா பாணியில் நடந்த யெல்லோ படப்பிடிப்பு | தியாகராஜ பாகவதர் கதைக்கும், காந்தாவுக்கும் தொடர்பா? |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நட்சத்திர நிகழ்ச்சி ‛குக் வித் கோமாளி'. சமையல் நிகழ்ச்சியை சுவையுடன் காமெடியாகவும் கொடுக்க முடியுமா என பார்வையாளர்களை வியக்க வைத்தது. இந்த நிகழ்ச்சி மூலம் பலர் புகழ் வெளிச்சம் பெற்றனர். அதில் முக்கியமானவர் நடிகர் புகழ்.
நான்கு சீசன்களை கடந்த இந்நிகழ்ச்சியின் 5வது சீசன் விரைவில் துவங்க உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு நடுவர்களாக பிரபல சமையல் கலை நிபுணர்கள் ‛செப்' தாமோதரன் மற்றும் ‛செப்' வெங்கடேஷ் பட் ஆகியோர் இருந்து வருகின்றனர். 5வது சீசனுக்கும் இவர்கள் தான் நடுவர்கள் என செய்திகள் வெளியாகி வந்தன. தற்போது இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகிவிட்டதாக வெங்கடேஷ் பட் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், ‛‛குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் நான் பங்கேற்கவில்லை என தெரிவித்துக் கொள்கிறேன். பல லட்சம் பார்த்த இந்த நிகழ்ச்சியிலிருந்து சிறிது காலம் பிரேக் எடுக்க விரும்புகிறேன். எனது ஜாலியான இன்னொரு முகத்தை காண்பித்த இந்த நிகழ்ச்சிக்கும், 24 ஆண்டுகளுக்கு மேலாக நான் அங்கம் வகித்த சேனலுக்கும் நன்றி. அதே நேரத்தில் மற்ற வாய்ப்புகளை நோக்கி செல்ல முடிவெடுத்து உள்ளேன்.
பலரின் மன அழுத்தத்தை குறைக்கும் ஒரு நிகழ்ச்சியில் நான் பங்கேற்க முடியாது என்ற கடினமான முடிவை எடுத்துள்ளேன். இதில் நான் உறுதியாக உள்ளேன். விரைவில் வர உள்ள வித்தியாசமான வேறு ஒரு நிகழ்ச்சியில் உங்கள் அனைவரையும் சந்திக்க காத்திருக்கிறேன். அது என்ன என்பதை யூகித்து கொண்டே இருங்கள் நன்றி'' என தெரிவித்துள்ளார்.
வெங்கடேஷ் பட்-ன் இந்த முடிவு ‛குக் வித் கோமாளி' நிகழ்ச்சி குழுவினருக்கும், அதன் ரசிகர்களுக்கும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.