பராசக்தி முதல் பாடலான 'அடி அலையே' வெளியீடு | தயாரிப்பாளர்களுக்கு கூட பாடல் உரிமையை வழங்கியது இல்லை: இளையராஜா | 'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு : நவ., 8ல் முதல் பாடல் | சத்ய சாய் பாபாவின் மகிமையை சொல்லும் ‛அனந்தா' : நவ., 23ல் வெளியீடு | கிஸ் முதல் நெட்வொர்க் வரை... இந்த வாரா ஓடிடி ரிலீஸ்...! | ''பீரியட் படம் பண்ணுவது தனி அனுபவம்... டைம் மிஷின் மூலம் அந்த காலம் செல்வது மாதிரி'': துல்கர் சல்மான் | ரோஜா 'கம்பேக்': 'லெனின் பாண்டியன்' படத்தில் நடிக்கிறார் | மணிரத்னம் படம் : சிம்புவிற்கு பதில் விஜய் சேதுபதி | ரஜினிகாந்த்தை 'தலைவர்' எனக் குறிப்பிட்ட கமல்ஹாசன் | ஹரிஷ் கல்யாண் அடுத்து நடிக்கும் இரண்டு படங்கள் |

தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக இருந்து வருகிறது ஜீ தமிழ். இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள், நிகழ்ச்சிகள் என அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்த வருட தீபாவளிக்கு என்னவெல்லாம் ஸ்பெஷல் என்பது குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
அதாவது காலை 8 மணி முதல் 9.30 மணி வரை சுகி சிவம் தலைமையில் உணவு பற்றிய விழிப்புணர்வு வளர்ந்து உள்ளதா? குறைந்துள்ளதா? என்ற தலைப்பில் மோகன சுந்தரம், ஆர் ஜே ஆனந்தி, நீலகண்டன், பர்வீன் சுல்தானா, சாந்தமணி, சிவா சதீஸ் ஆகியோர் பங்கேற்கும் சிறப்பு பட்டிமன்றம் ஒளிபரப்பாக உள்ளது.
அதனை தொடர்ந்து காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை ஆர்யா நடிப்பில் வெளியாகி வெற்றிப்பெற்ற ‛காதர் பாஷா' திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. பிறகு மதியம் 12.30 மணி முதல் ஜீ தமிழ் குடும்ப விருதுகள் விழா ஒளிபரப்பாக உள்ளது.
ஜீ தமிழ் குடும்ப விருதுகள் மூலமாக ஜீ குடும்பத்தின் பிரபலங்களின் திறமைகளை ஊக்குவித்து அவர்களுக்கு மகுடம் சூட்டும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் விழாவை நடத்தி வருகிறது. அந்த வகையில் இந்த வருடத்திற்கான ஜீ தமிழ் குடும்ப விருதுகள் விழாவிற்கான ஷூட்டிங் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. இதன் முதல் பாகம் கடந்த ஞாயிறு அன்று வெளியானது. இரண்டாம் பாகம் நவம்பர் 12ம் தேதி மதியம் 12.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பேவரைட் நடிகர்கள், பேவரைட் சீரியல், பெஸ்ட் சீரியல், பெஸ்ட் நடிகர்கள் என பல கேட்டரிகளுக்கு விருதுகள் வழங்கப்படும் என எதிர்பார்ப்படுகிறது. இந்த பகுதியில் தகுதியான மணமக்களை தேர்வு செய்து அவர்களுக்கு 5 சவரன் நகை அளித்து ஜீ தமிழ் பிரபலங்கள் முன்னிலையில் தொலைக்காட்சி சேனல் திருமணம் நடத்தி வைத்தது. திருமணம் முடிந்ததும் மணமக்களின் உணர்வுபூர்வமான தருணங்ளை பகிர்ந்து கொண்டனர்.
மேலும் மாரி சீரியல் நாயகியான ஆஷிகா படுகோனே தமிழ், தெலுங்கு, பெங்காலி, போஜ்புரி என நான்கு மொழிகளிலும் நாயகியாக நடித்து வருவதால் அவருக்கு பான் இந்தியா ஸ்டார் விருதை நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் வழங்கியுள்ளார். ஆஷிகாவிற்கு நான்கு மாநிலத்தை சேர்ந்த ரசிகர்களும் ஒன்று சேர்ந்து பெரிய சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர். இப்படி பல உணர்வுபூர்மான தருணங்களுடன் ஜீ தமிழ் குடும்ப விருதுகள் பகுதி-02 ஒளிபரப்பாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.
அடுத்ததாக மாலை 4.30 மணி முதல் சந்தானம் நடிப்பில் காமெடி கலந்த திகில் திரில்லர் திரைப்படமான ‛டிடி ரிட்டர்ன்ஸ்' திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. இறுதியாக இரவு 7 மணி முதல் 10 மணி வரை சரிகமப சுட்டிஸ் பங்கேற்கும் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.