சினிமா வருமானம் போச்சு: அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய சுரேஷ் கோபி முடிவு | மனநல தூதர் ஆனார் தீபிகா | திருத்தங்களுடன் வெளிவருகிறது 'அஞ்சான்' | எனக்கு படங்கள் இல்லையா? : மொய் விருந்தில் ஆவேசமான ஐஸ்வர்யா ராஜேஷ் | 'காந்தாரா' பாணியில் உருவாகும் 'மகாசேனா' | பிளாஷ்பேக்: விஜயகாந்த், கமல் இணைந்து நடித்த ஒரே படம் | பிளாஷ்பேக்: தம்பியை இயக்குனராக்கி அழகு பார்த்த அக்கா | மம்முட்டி பட இயக்குனருக்கு வெற்றியை தருவாரா சவுபின் சாஹிர் ? | 10 நாள் அவகாசத்துடன் மீண்டும் ஆரம்பமான கன்னட பிக்பாஸ் 12 | விஜய்க்கு பவன் கல்யாண் ஆலோசனை சொன்னாரா? |
நாகர்கோவிலை சேர்ந்தவர் நலீப் ஜியா. மாடலிங் துறையில் இருந்த ஜியா ஏராளமான விளம்பர படங்களில் நடித்துள்ளார். ஏசியா நெட் சேனலில் ஒளிபரப்பான 'மவுனராகம்' என்ற தொடரின் மூலம் புகழ்பெற்றார் ஜியா. அந்த தொடர் 900 எபிசோட்களை தாண்டி ஒளிபரப்பானது. இதன் மூலம் கேரளா முழுமைக்கும் தெரிந்த நடிகர் ஆனார். இந்த நிலையில் தமிழில் தயாராகி உள்ள 'கும்பாரி' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்திருக்கிறார். இந்த படத்தின் இன்னொரு நாயகனாக விஜய் விஷ்வா நடிக்கிறார். கதாநாயகியாக மஹானா சஞ்சீவி நடிக்கிறார். மேலும் ஜான்விஜய், பருத்திவீரன் சரவணன், சாம்ஸ், மதுமிதா, செந்தி, காதல் சுகுமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
படத்தை கெவின் ஜோசப் இயக்குகிறார், ஜெயபிரகாஷ் ஜெய்சன், பிரித்வி இசை அமைக்கிறார்கள், பிரசாத் ஆறுமுகம் ஒளிப்பதிவு செய்கிறார், டி.குமாரதாஸ் தயாரிக்கிறார்.தமிழில் அறிமுகமாவது குறித்து நலீப் ஜியா கூறும்போது "சினிமாவில் எனக்கு இது முதல் படம். இதற்கு முன்பு மலையாளத்தில் ஏசியா நெட் சேனலில் ஒரு சீரியலில் கிட்டத்தட்ட 920 எபிசோடுகள் கதாநாயகனாக நடித்துள்ளேன். சினிமா எப்படி இருக்கும் என்கிற ஆர்வத்தில்தான் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். நான் நினைத்து வந்ததைவிட இங்கே சினிமா இன்னும் பயங்கரமாக இருக்கிறது" என்கிறார்.