''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
தமிழ் சின்னத்திரையில் பிரபலமான தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக இருந்து வருகிறது ஜீ தமிழ். சுதந்திர தின விழாவான ஆகஸ்ட் 15-ல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் என்னென்ன ஸ்பெஷல் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக உள்ளன? என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
காலை 9 மணிமுதல் 10.30 மணிவரை சுகிசிவம் தலைமையில் இளைய தலைமுறைக்கு சுதந்திரத்தின் அருமை தெரிந்திருக்கிறது, தெரியவில்லை என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் ஒளிபரப்பாக உள்ளது. இந்தபட்டிமன்றத்தில் பர்வீன் சுல்தானா, மோகன சுந்தரம், சாந்தமணி, ஷியாம்லா ரமேஷ்பாபு, ஆர்ஜே அனந்தி, சுந்தர ஆவுடையப்பன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
காலை10.30 மணிக்கு சிறப்பு திரைப்படமாக கோஷ்டி ஒளிபரப்பாக உள்ளது. இதில் காஜல் அகர்வால், ஊர்வசி, ராதிகா, யோகிபாபு, தேவதர்ஷினி, ரெடின்கிங்ஸ்லி, மனோபாலா, மயில்சாமி, உட்பட பலர் இணைந்து நடித்துள்ளனர். இருபது வருடத்துக்குமுன் தன் தந்தையிடமிருந்து தப்பி சென்ற ரவுடியை கைது செய்ய துடிக்கிறார் இன்ஸ்பெக்டர் காஜல் அகர்வால். ஒருகட்டத்தில் அவன் கையில் பிடிபட்டும் தப்பிச் செல்கிறான். அவனை துரத்திச் செல்லும்போது மர்மநபர் ஒருவனை சுட்டு விடுகிறார் காஜல். அதன்பின் நடப்பது என்ன என்பதை காமெடி, பேய் கலாட்டவுடன் பேசும் படம் தான் கோஷ்டி.
மதியம் 1.30 மணி முதல் 4.30 மணிவரை கவுதம் கார்த்திக், விஜய்டிவி புகழ், ரேவதி ஷர்மா, ரிச்சர்ட் ஹஸ்டன், போஸ் வெங்கட், நீலிமாராணி, ஜேசன்ராவ், மதுசூதனன்ராவ் ஆகியோர் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றியை பெற்ற ஆகஸ்ட்16, 1947 என்ற திரைப்படம் ஒளிபரப்பாகஉள்ளது.
பிரிட்டிஷ் அதிகாரியான ராபர்ட் கிளைவ் திருநெல்வேலியை அடுத்துள்ள செங்காடு கிராமத்தில் இருக்கும் மக்களை கொத்தடிமைகளாக வைத்து வேலை வாங்கி வர நாட்டிற்கு சுதந்திரம் கிடைக்கிறது. ஆனால் இந்த தகவலை மக்களுக்கு சொல்லாமல் மறைந்து தொடர்ந்து வேலை வாங்கி கொடுமைப்படுத்தி வர அதன்பிறகு என்ன நடக்கிறது? கவுதம் கார்த்திக் என்ன செய்கிறார் என்பது தான் இந்தபடத்தின் ஒன்லைன்.
இதனைத்தொடர்ந்து 4.30 மணி முதல் 6.00 மணி வரை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கி வரும் தமிழா தமிழாவின் சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாகி உள்ளது. சமைக்க தெரியாத பெண்கள் Vs சமைக்க தெரிந்தவர்கள் என சீரியல் பிரபலங்கள், யு-டியூப் சேனலில் குக்கிங் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர்கள் என பலர் பங்கேற்க உள்ளனர்.
புத்தம் புதிய திரைப்படங்கள், மாறுபட்ட நிகழ்ச்சிகளுடன் இந்த சுதந்திர தினத்தை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியுடன் கொண்டாடி மகிழுங்கள்.