ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
சின்னத்திரை நடிகையான ரச்சிதா மஹாலெட்சுமி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் மிகவும் பிரபலமடைந்துவிட்டார். கணவர் தினேஷுடனான சண்டையின் காரணமாக தனியே வசித்து வரும் ரச்சிதா, இப்போதெல்லாம் தனக்காக, தனது மகிழ்ச்சிக்காக மட்டுமே அதிக கவனம் செலுத்தி வருவதாக சமீபத்திய பதிவுகளில் தெரிவித்து வருகிறார். ஏற்கனவே, தனக்கு பிடித்தமான ராயல் என்பீல்ட் பைக் வாங்கில் அதில் அடிக்கடி ரைட் சென்று வரும் ரச்சிதா, தற்போது புதிதாக கார் ஒன்றை வாங்கியுள்ளார். மோரிசன் கேரஜ் கம்பெனியின் சொகுசு ரக காரான அந்த காரின் விலை 22 லட்சம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. கார் வாங்கிய ரச்சிதா, நண்பர்கள் ஷிவின், விஷ்ணு விஜய் ஆகியோருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு அதில் அவர்களுக்கு தனது நன்றியையும் தெரிவித்துள்ளார். ரச்சிதாவின் கடின உழைப்பை பாராட்டி சக நடிகர்கள் உட்பட ரசிகர்கள் பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.