ஒத்தரோசாவில் இருந்து ஒரு நடிகன் | போட்டோ எடுக்க போய் நடிகராகியிட்டேன்! | பிளாஷ்பேக்: எம் ஜி ஆர் நடிக்க இருந்து, பின் கைவிடப்பட்ட அவரது “உடன்பிறப்பு” திரைப்படம் | உரிமைக்குரல், நட்புக்காக, ஜெயிலர் - ஞாயிறு திரைப்படங்கள் | சவுந்தர்யா பயோபிக் படத்தில் நடிக்க ஆசைப்படும் பிரியங்கா மோகன் | சிம்பு, தனுஷ் மோதல் இருக்கிறதா : சமுத்திரக்கனி பதில் | விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகாவின் ‛ரணபலி' படத்தின் முதல் பாடல் வெளியானது | துரந்தர் 2 படத்தின் முதல் விமர்சனத்தை வெளியிட்ட யாமி கவுதம் | மார்ச் 6ல் ஜீ5 ஓடிடியில் வெளியாகும் காந்தி டாக்ஸ் | பிரதமர் மோடியுடன் சந்திப்பு குறித்து ராஷ்மிகா நெகிழ்ச்சி |

2018ம் ஆண்டு கன்னடத்தில் ஒளிபரப்பான 'பிலி ஹெந்தி' என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர் தேஜஸ்வினி கவுடா. தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சுந்தரி நீயும் சுந்தரனும் நானும் தொடரின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு 'கல்யாணம் முதல் காதல் வரை', 'ஈரமான ரோஜாவே 2' தொடர்களில் நடித்தார். தற்போது, 'வித்யா நம்பர் 1 ' தொடரில் நடித்து வருகிறார்.
தேஜஸ்வினி கன்னட தொலைக்காட்சி நடிகர் அமர்தீப் என்பவரை கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அப்போது நிச்சயிக்கப்பட்டபடி இருவரது திருமணமும் டிச., 14 அன்று நடந்தது. புதுமண தம்பதிகளுக்கு சின்னத்திரையுலகினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.