விதி எப்போதும் மாறாது: ஜெயம் ரவி | ஒரு நேர்மையாளனின் கதை - மனம் திறந்த நந்தா பெரியசாமி | பிளாஷ்பேக்: புதுமுகங்களின் அணிவகுப்பில் புதுமை படைத்த “ஒருதலை ராகம்” | 2024 - முத்திரை பதித்த முத்துக்கள்... | தாயைக் காத்த தனயன், உரியடி, பைரவா - ஞாயிறு திரைப்படங்கள் | ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணையும் பிரியங்கா சோப்ரா | பாலிவுட்டில் கால் பதிக்கும் அமரன் பட இயக்குனர் | ரசிகர்களைக் திருப்திப்படுத்த மோகன்லால் எடுத்த அதிரடி முடிவு | சார்பட்டா பரம்பரை 2 அப்டேட் தந்த ஆர்யா | விடாமுயற்சி படத்தில் விஜய் டிவி பிரபலம் |
மியூசிக் சேனலில் 'டிக் டிக் டிக்' நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் வீஜே சஷ்டிகா ராஜேந்திரன். புரொபஷனல் வீஜே போல் அல்லாமல், வடிவேலு போன்ற உடல்மொழியாலும் நகைச்சுவையான பேச்சாலும் முதலில் குழந்தைகள் மனதில் இடம்பிடித்தார். அதன்பின் படிப்படியாக சஷ்டிகாவை இளைஞர்களுக்கும் பிடிக்க ஆரம்பித்தது. ஒருக்கட்டத்தில் அதிரடியாக சினிமாவிலும் என்ட்ரி கொடுத்து சந்தானத்துடன் இணைந்து பாரீஸ் ஜெயராஜ் படத்திலும் நடித்திருந்தார். இருப்பினும் இவர் அதிக பிரபலமானது டிக்டாக் வீடியோவில் தான். ஒரு திருமண வீட்டில் கோவை சரளா போல் இவர் செய்து வெளியிட்டிருந்த டிக்டாக் வீடியோ மிகவும் வைரலானது. தொடர்ந்து பல்வேறு டிவி நிகழ்ச்சிகளில் வலம் வந்து கொண்டிருக்கும் சஷ்டிகாவுக்கு தற்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழில் விளையாட்டு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சஷ்டிகா தற்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் 'ப்ரோ கபடி' நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கி வருகிறார்.