துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
சின்னத்திரை பிரபலங்களலான அர்ணவ் - திவ்யா குடும்ப விவகாரம் தற்போது சோஷியல் மீடியாவில் ஹாட் டாப்பிக்காக சென்று கொண்டிருக்கிறது. அர்ணவுக்கு எதிராக பலரும் தற்போது குற்றசாட்டுகளை பகிர்ந்து வருகின்றனர். சோஷியல் மீடியாவில் அர்ணவுக்கு எதிரான ஆடியோ ரெக்கார்டிங் நிரம்பி வழுகிறது. இதனையடுத்து அவர் கமிட்டாகியிருந்த செல்லம்மா சீரியலிலிருந்து அர்ணவ் அண்மையில் விலகியுள்ளார்.
இந்நிலையில், அர்ணவின் நண்பரும் சக நடிகருமான அருண், அர்ணவுக்கு ஆதரவாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், 'அர்ணவை எனக்கு 8 வருடமாக தெரியும். என் வாழ்வின் ஏற்ற இறக்கங்களில் அவர் என்னுடன் இருந்துள்ளார். சாதிமத பேதம் பார்க்காத நல்ல மனம் கொண்டவர். பலருக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தருகிறார். அவர் சுத்தமான இருதயம் கொண்டவர். ஆனால், இன்று அவரது குடும்ப விவகாரத்தில் ஒரு பிரச்னை வரும் போது சக நடிகர்களில் சிலர் தேவையில்லாமல் உள்நுழைகிறீர்கள். அர்ணவுக்கு எதிராக அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை சொல்கிறீர்கள். அது கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்னை. அதை அவர்கள் கடந்து வர நேரம் கொடுக்க வேண்டும். எனவே, மீடியா, கோ ஆர்டிஸ்ட் என அனைவரும் அவர்களுக்கான நேரத்தை கொடுங்கள். நீ தப்பு நான் தப்பு என பேச வேண்டாம். நான் எனது நண்பன் அர்ணவிற்காக நிற்கிறேன்' என பேசியுள்ளார்.
இதைபார்த்து கடுப்பான நெட்டிசன்கள் 'மனைவிக்கு தெரியாம கள்ளத்தொடர்பு வைக்கிறதையும், மனைவிய அடிக்கிறதையும் சுத்தமான மனசு இருக்கிறவன் செய்ற செயலா? இதையும் நீ ஆதரிக்கிறியா?' என கேட்டு சோஷியல் மீடியாக்களில் அருணை பொளந்து கட்டி வருகின்றனர்.