சின்னத்திரை நடிகையான 'ரோஷ்னி ஹரிப்ரியன்' தமிழகத்தில் அதிக ரசிகர்களை கொண்ட டாப் ஸ்டார் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா தொடரின் மூலம் அறிமுகமான ரோஷ்னி, அந்த சீரியலில் நடித்து வந்த காரணத்தால் தமிழின் ஆகச்சிறந்த சில படங்களில் நடிக்கும் வாய்ப்புகளை இழந்தார். இதனால், சினிமாவின் பக்கம் முழுகவனத்தையும் திருப்ப நினைத்த அவர் சீரியலை விட்டு வெளியேறினார். அதன்பிறகு அவருக்கு சொல்லிக்கொள்ளும் படியாக படவாய்ப்புகள் எதுவும் மீண்டும் கிடைக்கவில்லை.
இதற்கிடையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு கலக்கினார். தொடர்ந்து தன்னை பலவிதங்களில் போட்டோஷூட் எடுத்து அதை வெளியிட்டு கவனம் ஈர்த்து வருகிறார். அந்த வரிசையில் அண்மையில் டீசர்ட், ஜீன்ஸில் செம மாஸாக அமர்ந்து போஸ் கொடுத்திருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். வைரலாகி வரும் அந்த புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் 'நீங்க கோலிவுட் இல்ல ஹாலிவுட்டுக்கே முயற்சி செய்யலாம்' என ரோஷ்னிக்கு ஊக்கம் அளித்து வருகின்றனர்.