ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
சூப்பர் ஹிட் தொடரான 'ரோஜா' தொடரில் ஷாலினிக்கு பிறகு வில்லியாக நடித்து கலக்கியவர் வீஜே அக்ஷயா. தற்போது வரை அவர் நடித்த எபிசோடுகள் ஒளிபரப்பாகி வருகிறது. சீரியல் மட்டுமல்லாமல் சில நிகழ்ச்சிகளையும் ஆங்கரிங் செய்து வருகிறார். அக்ஷயாவுக்கு திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் அண்மையில் இரண்டாவது திருமண நாளை கணவருடன் சேர்ந்து கொண்டாடியுள்ளார். அப்போது, அக்ஷயா தான் கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான செய்தியை கர்ப்பகால போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுடன் பகிர்ந்துகொண்டார். இதனையடுத்து சக நடிகர்களும், ரசிகர்களும் அக்ஷயாவுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.