அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
சின்னத்திரை வில்லி நடிகையான வந்தனா மைக்கேல் தற்போது மீண்டும் வில்லியாக ரீ- என்ட்ரி கொடுக்கிறார். ஆனந்தம் தொடரின் மூலம் சின்னத்திரை நடிகையாக அறிமுகமாக வந்தனா தமிழ் தொலைக்காட்சிகள் அனைத்திலும் தொடர்ந்து கேரக்டர் ரோலில் நடித்து வந்தார். 'வம்சம்' தொடரில் முதன்முறையாக வில்லியாக நடித்த போது அவரது நடிப்பு நல்ல வரவேற்பை பெற்றது. இதனைதொடர்ந்து 'கல்யாணம் முதல் காதல் வரை', 'மெல்ல திறந்தது கதவு', 'பொன்மகள் வந்தாள்' ஆகிய தொடர்களில் வில்லியாக நடித்து அதிகம் பிரபலமானார். இடையில் சிறிது காலம் நடிப்புக்கு பிரேக் விட்டிருந்த வந்தனா தற்போது மகராசி சீரியலில் மீண்டும் வில்லியாக நடிக்கிறார். இந்த தொடரில் ஏற்கனவே நடித்து வரும் நடிகர் ரியாஸ் கானின் மனைவியாக வந்தனா நடிக்கவுள்ளார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. வந்தனாவின் ரீ-என்ட்ரியை அவரது ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து வருகின்றனர்.