ஏப்ரல் முதல் வாரம் முழுவதும் நெட்பிளிக்ஸ் ஆதிக்கம் | ரூ.52 கோடி வசூலுடன் வலம் வரும் வீர தீர சூரன் | 'இட்லி கடை' புதிய வெளியீட்டுத் தேதி எப்போது? | 'குட் பேட் அக்லி' முன்பதிவு இன்று முதல் ஆரம்பம் | பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் | அருண் விஜய் படத்திற்கு பாடல் பாடிய தனுஷ் | அமெரிக்காவில் ஏப்., 9ல் குட் பேட் அக்லி பிரீமியர் காட்சி |
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் சீசன் 8 நிகழ்ச்சியில் பாடகராக போட்டியிட்டவர் பரத். இறுதி போட்டியில் அருமையாக பாடி ஸ்ரீதர் சேனாவுக்கே டப் கொடுத்து இரண்டாவது இடத்தை பிடித்தார். தொடர்ந்து விஜய் டிவியின் குக் வித் கோமாளி சீசன் 3யிலும் பங்கேற்று வருகிறார். ஆரம்பத்தில் பரத் எதற்கு இந்த நிகழ்ச்சியில் தேவையில்லாமல் வருகிறார் என்று நினைத்த ரசிகர்களை கொஞ்சம் கொஞ்சமாக தன் பக்கம் கவர்ந்து ரசிகர்களாக மாற்றியுள்ளார். இந்நிலையில், பரத் தற்போது பின்னணி பாடகராக அறிமுகமாகியுள்ளார். மிர்ச்சி சிவா நடிக்கும் 'சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்' என்கிற படத்தில் 'சோடி சேரலாம்' என்கிற பாட்டை பாடியுள்ளார். அந்த பாடல் தற்போது யூ-டியூபில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பாடலின் மூலம் வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்துள்ள பரத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.