அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா தொடரில் அறிமுகமானவர் காவ்யா அறிவுமணி. தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். இதற்கிடையில் சினிமாவிலும் எண்ட்ரி கொடுத்துள்ள காவ்யா, அடிக்கடி போட்டோஷூட்களிலும் பிசியாக உள்ளார். தற்போது புதிய கான்செப்ட்டாக கிராமத்தில் சித்தாள் வேலை பார்க்கும் பெண்ணாக பாவடை தாவணியில் புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை பார்த்துவிட்டு பலரும் முதலில் புதிய படத்தின் ஷூட்டிங்காக இருக்குமோ என சந்தேகப்பட்டனர். ஆனால், அது வெறும் போட்டோஷூட் தான். கொடுத்த கதாபாத்திரத்திற்கு கட்சிதமாக பொருந்திக்கொள்ளும் காவ்யா விரைவில் வெள்ளித்திரையிலும் ஒரு பெரிய ரவுண்ட் அடிப்பார் என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து வருகின்றனர்.