படப்பிடிப்புக்கு முன்பே பின்னணி இசை : 'ஸ்பிரிட்'டில் புதிய முயற்சி | திருமணத்திற்கு பிறகு கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை : ரகுல் ப்ரீத் சிங் | சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி' | புகழ் படம் வந்ததே தெரியாது, பாலா படம் வந்தது தெரிகிறது…!! | மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம் | குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி' | அக்., 2ல் ஓடிடியில் வெளியாகும் ‛தி கேம்' வெப் தொடர் | நிவின்பாலிக்கு தமிழில் ரசிகர்கள் கிடைப்பார்களா? | சம்பளம் வாங்காமல் நடிப்பார் ஜி.வி.பிரகாஷ் | விஷால் திருமணத்துக்கு செல்வாரா மிஷ்கின் |
மாடலிங் துறையிலிருந்து சின்னத்திரை நடிகையாக பிரபலமானவர் ரக்ஷா ஹோலா. பெங்களூரை சேர்ந்த ரக்ஷா, நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் கதாநாயகியாக தேவி என்ற கதாபாத்திரத்தில் நடித்து கலக்கினார். அந்த தொடரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், கொரோனா ஊரடங்கு காலத்தில் ஏற்பட்ட சில பிரச்னைகளால் அந்த தொடர் புதிய மாற்றங்களுடன் ஒளிபரப்ப தொடங்கிய போது, ரக்ஷா ஹோலா தொடரிலிருந்து விலகினார். இதனையடுத்து அவர் ஜீ தமிழின் 'அன்பே சிவம்' தொடரில் நடிக்க ஆரம்பித்தார். அன்பே சிவம் தொடரும் ஓரளவு வரவேற்பை பெற்று வரும் நிலையில், தற்போது ரக்ஷா ஹோலா அதிலிருந்தும் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் விலகியதற்கான காரணம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. இதனால், அவரது ரசிகர்கள் அனைவரும் வருத்தத்தில் உள்ளனர். அவர் கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் என்ற தகவலை தொலைக்காட்சி நிறுவனம் மிக விரைவில் வெளியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.