தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவை சந்தித்த நடிகர் விஜய்! | கமலின் விக்ரம் படத்தின் கதை கசிந்தது | அம்மாவாகி விட்டால் மூலையில் உட்கார்ந்து கொண்டு அழ வேண்டுமா? விஜயலட்சுமி காட்டமான பதில் | ரசிகர்களுக்கு தீபாவளி விருந்து - போனி கபூர் | ‛ரஜினி 169' எப்போது ஆரம்பம் | விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | சித்தார்த் நடிக்கும் புதிய ஹிந்தி வெப் தொடர் | கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியாகும் 'தி லெஜண்ட்' பட பர்ஸ்ட் லுக் | மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் திரிஷா சாமி தரிசனம் | 'டான்' வெற்றியைக் கொண்டாடிய படக்குழுவினர் |
ஜீ தமிழ் தொலைக்காட்சியின் முன்னணி தொகுப்பாளினி அர்ச்சனா, தனது மகள் ஸாராவை சின்னத்திரை ரியாலிட்டி ஷோவில் அறிமுகம் செய்து வைத்தார். அதுமட்டுமில்லாமல் அர்ச்சனா அவரது மகளுடன் சேர்ந்து நடத்தி வரும் யூ-டியூப் சேனலுக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் வெளியான சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் அர்ச்சனாவும், ஸாராவும் முக்கிய ரோல்களில் நடித்துள்ளனர். ரசிகர்கள் மத்தியில் ஸாராவின் நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில், அர்ச்சனா தனது மகள் ஸாராவுடன் சேர்ந்து விஜய் டிவியில் பிரபல ஷோ ஒன்றை தொகுத்து வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஸாரா தனது அம்மாவை போல சிறப்பான தொகுப்பாளினியாக வருவதற்கு ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வரும் அதவேளையில், அம்மா மகள் இருவரும் சேர்ந்து தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி என்பதால் ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது. மிக விரைவில் நிகழ்ச்சி பற்றிய மற்ற விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.