ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

பிரபலமான 'ரோஜா' சீரியல், மதிய நேரத்தில் ஒளிபரப்பாகி வந்தது. இந்த தொடர், மக்கள் மத்தியில் அபார வரவேற்பை பெற்றதையடுத்து ப்ரைம் டைமில் மாற்றப்பட்டது. டிஆர்பியில் போட்டியாக வந்த பாரதி கண்ணம்மா சீரியலுக்கும் டப் கொடுத்து நம்பர் 1 இடத்தை நீண்ட நாட்களுக்கு தக்க வைத்து கொண்டது.
இந்த தொடரில் நாயகனாக சிபு சூரியனும், நாயகியாக ப்ரியங்க நல்காரியும் நடித்து வருகின்றனர். மேலும், காயத்ரி சாஸ்திரி, வடிவுக்கரசி, ராஜேஸ், சிவா உள்ளிட்ட முக்கிய நடிகர்களும் நடித்து வருகின்றனர். ஆயிரம் எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் இந்த தொடர் தமிழ் ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்த தொடர்களில் டாப் இடத்தில் உள்ளது. தற்போது இந்த தொடரை வங்காள மொழியில் ரீமேக் செய்ய உள்ளதாக சின்னத்திரை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வங்காள மொழியில் 'சாத்தி' என்ற பெயரில் தயாராகி வருகிறது. இதற்கான புரோமோ கடந்த ஜனவரி 4ம் தேதி வெளியிட்டது.
வழக்கமாக ஹிந்தி சீரியலில் இருந்து தமிழுக்கு டப்பிங் செய்தோ, ரீமேக் செய்தோ சீரியல்கள் வெளியாகி வந்தது. இந்நிலையில் தற்போது தமிழ் சீரியல்களும் மற்ற மொழியில் ரீமேக் செய்யும் அளவுக்கு ஹிட் அடித்து வருகின்றன.




